புதிய குறியீடுகளைத் தமிழ் எழுத்தில் திணித்து, தமிழ் மொழியைச் சிதைக்காதே! அறமன்ற மொழி, சட்டக்கல்வி தமிழில் இல்லை! ஆட்சி மொழி, பயிற்று மொழி தமிழில் இல்லை. மருத்துவம், பொறியியல், தொழில் கல்வி தமிழில் இல்லை. மழலைப்பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை கல்வி தமிழில் இல்லை. ஊர், தெரு, நகரம், குழந்தையின் பெயர்கள் தமிழில் இல்லை.
பெயர்ப் பலகைகளில் தமிழ்:
| அண் கோ – குழுமம் |
| அலுமினியம் – வெண்மாழை |
| அலுமினிய ஃபேக்ட்ரி – வெண்மாழை தொழிற்கூடம் |
| அலுமினியம் ஸ்டோர் – வெண்மாழை அங்காடி |
| அபார்ட்மெண்ட் ஸ்டோர் – அடுக்குமாடி அங்காடி |
| அகாடமி – கல்விக் கழகம், கலைக் கழகம் |
| அசெம்பிளி – சட்டப்பேரவை |
| அட்வகேட் – வழக்குரைஞர் |
| அட்வைசர் ரூம் – அறிவுரையாளர் அறை |
| அசோசியேசன் – மன்றம், கழகம் |
| அலோபதி டாக்டர் – ஆங்கில மருத்துவர் |
| அனிமல் ஆடிட்டோரியம் – விலங்குகள் கண்காட்சி |
| அக்ரிகல்ச்சர் ஆபீஸ் – வேளாண்மை அலுவலகம் |
| அட்வைசிங் ஏஜண்ட் – விளம்பர முகவர் |
| அட்லஸ் – நிலவரைவுப் படம் |
| அட்ரஸ் – முகவரி |
| அமுதன் ஸ்டில்ஸ் – அமுதன் ஒளிப்பட நிலையம் |
| அன்றில் டி.டி.பி. – அன்றில் கணினியகம் |
| அசோக் டெய்லர் – அசோகன் தையலகம் |
| அழகிரி ஹோட்டல் – அழகுமலை உணவகம் |
| அருண் டைல்ஸ் – அருண் ஓடு (ஒட்டுக்கல்) |
| அமுதன் ஸ்டில்ஸ் – அமுதன் ஒளிப்பட நிலையம் |
| ஆயில் ஸ்டோர் – எண்ணெய் அங்காடி |
| ஆஃப்செட் பிரஸ் – மறுதோன்றி அச்சகம் |
| ஆர்.டி.ஓ. ஆபீஸ் – வருவாய்க் கோட்ட அலுவலகம் |
| ஆடியோ சென்டர் – ஒலிப்பதிவகம் |
| ஆடியோ வீடியோ கவரேஜ் – ஒலி / ஒளிப்பதிவகம் |
| ஆடியோ கேசட் ஷாப் – ஒலி நாடா அங்காடி |
| ஆடியோ / வீடியோ ஷாப் – ஒலி / ஒளி நாடாப் பதிவகம் |
| ஆட்டோமொபைல்ஸ் – தானியங்கி விற்பனையகம் |
| ஆட்டோ ஸ்டாண்டு – தானி நிறுத்தம் |
| ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் – தானி உதிரிப்பாகங்கள் |
| ஆகாசவாணி ஸ்டேசன் – வானொலி நிலையம் |
| ஆர்ட்டிஸ்ட் – ஓவியர் |
| ஆர்ட்ஸ் – ஓவியம் |
| ஓவியம் ஆப்டிகல்ஸ் – கண்ணாடியகம் |
| ஆடிட்டோரியம் – கலையரங்கம் |
| ஆயில் மில் – எண்ணெய் ஆலை |
| ஆஸ்பெஸ்டாஸ் – கல்நார் ஓடு |
| ஆண்டி கிராப்ட் – கைவினைப் பொருள்கள் |
| ஆண்டனா – அலைவாங்கி |
| ஆ(ஹா)ர்டுவேர் – வன்பொருளகம் |
| ஆ(ஹா)ர்பர் – துறைமுகம் |
| ஆ(ஹா)ஸ்பிட்டல், ஆஸ்பத்திரி- மருத்துவமனை |
| ஆ(ஹே )ண்ட்லூம் க்ளாத்ஸ் – கைத்தறித் துணி |
| இண்டர்நெட் – இணைத்தளம் |
| இங்கிலீஷ் மீடியம் – ஆங்கிலவழிக் கல்வி |
| இம்போர்ட் – இறக்குமதி |
| இன்கம்டாக்ஸ் – வருமானவரி |
| இண்டர்நேசனல் ஹோட்டல் – பான்னாட்டு விடுதி |
| இன்சூரன்ஸ் – காப்புறுதி |
| இண்டர்வியூ – நேர்முகத் தேர்வு |
| ஈமெயில் – மின்னஞ்சல் |
| ஈவினிங் காலேஜ் – மாலைக் கல்லூரி |
| ஈஸிசேர் சேல்ஸ் – சாய்வு நாற்காலி விற்பனையகம் |
| ஈவினிங் பஜார் – மாலை அங்காடி |
| ஈஸ்வரி மெடிக்கல்ஸ் – ஈசுவரி மருந்தகம் |
| ஈசாக் மியூசிக்கல்ஸ் – நகையன் இசையகம் |
| ஈசுவரன் டிம்பர் – ஈசுவரன் மரவிற்பனை |
| ஈகையரசி காம்ப்ளக்ஸ் – ஈகையரசு அடிக்ககம் |
| ஈழக்கனி மார்க்கெட் – ஈழக்கனி அங்காடி |
| ஈழச் சிற்பி ஆர்ட்டிஸ்ட் – ஈழச் சிற்பி ஓவியக்கூடம் |
| ஈழத்தரசு எம்போரியம் – ஈழத்தரசு துணியகம் |
| ஈழமணி டிரான்ஸ்போர்ட் – ஈழமணி போக்குவர்த்தகம் |
| ஈழமலர் ஏஜெண்ட் – ஈழமலர் முகவர் |
| ஈசுவரி கிளினிக் – ஈசுவரி மருத்துவமனை |
| உமா ஸ்டோர் – உமா அங்காடி |
| உமாராணி சில்க் – அரசம்மை பட்டுத் துணியகம் |
| உசா ரேடியோ சர்வீஸ் – விடிவெள்ளி வானொலிப் பணியகம் |
| உமர் வாட்டர் சேல்ஸ் – கல்வியன் நீர் விற்பனையகம் |
| உரூத் ஆடிட்டோரியம் – அரசி பதிவுக் கூடம் |
| உர்சுலா ரெடிமேட் – பொறையன் ஆயத்த உடையகம் |
| உண்மை ஏஜெண்ட் – உண்மை முகவர் |
| உலகமுரசு பேக்கரி – உலக முரசு வெப்பகம் அடுமனை |
| உலகநாதன் கம்ப்யூட்டர் – உலகத் தலைவன் கணினியகம் |
| உலக நாயகி எலக்ட்ரானிக்ஸ் – உலகத் தலைவி மின்னணுவகம் |
| உலக நேயன் எக்சர்சைஸ் – உலக நேயன் உடற்பயிற்சியகம் |
| உலக வென்றி எக்ஸ்ரே – உகல வென்றி ஊடுகதிர் |
| உலகத்தமிழ் இண்டர்நெட் – உலகத்தமிழ் இணையத்தளம் |
| எலக்ட்ரிசிட்டி போர்டு – மின்சார வாரியம் |
| எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸ் – ஏற்றுமதி ஆடையகம் |
| எக்ஸ்போர்ட் – ஏற்றுமதி |
| எலக்ட்ரிக் ரெயில்வே – மின்தொடர் வண்டியகம் |
| எம்பிராய்டரி டிரெய்னிங் – ஓவியத் தையல் பயிலகம் |
| எலக்ட்ரிக் ஒர்க்ஸ் – மின்பணியகம் |
| எலக்ரிக்கல்ஸ் – மின்பொருளகம் |
| எலக்ட்ரானிக்கல் – மின்னணுப் பொருளகம் |
| எம்போரியம் – எழிலங்காடி |
| எண்டர்பிரைசஸ் – தொழில் முனைவம் |
| எஸ்டேட் – தொழிற்பேட்டை |
| எழிலன் கார் ஓர்க்ஸ் – எழிலன் மகிழுந்துப் பணியகம் |
| எட்மண்டு போட்டோ ஸ்டுடியோ – புரவலன் ஒளிப்பட நிலையம் |
| எட்வின் மொசைக் கல் – திருவன்பன் பளிங்குக் கல் |
| எரிக் எண்டர்பிரைசஸ் – செல்வம் வணிக நடுவம் |
| எஸ்.கே. ஜெராக்ஸ் – ச.க. படியகம் |
| எம்.வி. டெய்லர்ஸ் – மு.வே. தையலகம் |
| ஏஜென்சி – முகவாண்மை |
| ஏஜெண்ட் முகவர் ஏர்மெயில் – வானஞ்சல் |
| ஏர்போர்ட் சர்வீஸ் – வானூர்திப் பணியகம் |
| ஏர்பஸ் டூரிஸ்ட் – சுற்றுலா மிதவைப் பேருந்து |
| ஏர்பஸ் டிராவல்ஸ் – மிதவைப் பேருந்து |
| ஏர் டிராவல்ஸ் புக்கிங் ஆபீஸ் – வான் உலா பயணப்பதிவகம் |
| ஏர் டிக்கட் புக்கிங் ஆபீஸ் – வான் ஊர்திப்பயணப் பதிவு |
| அலுவலகம் ஏர் ஆம்புலன்ஸ் – மிதவை ஊர்தி |
| எசு.எசு. டிரான்ஸ்போர்ட் – ச.சு. போக்குவரத்துக் கழகம் |
| ஏ.சி. சீடி சேல்ஸ் – அ.சி. குருந்தகடு விற்பனையகம் |
| ஐ(ஹை) கோர்ட் – உயர்நீதி மன்றம் |
| ஐடென்டிடி கார்டு – அடையாள அட்டை |
| ஐஸ் கிரிம்ஸ் – பனிக்கூழகம் |
| ஐஸ் கிரிம் – பனிக்கூழ் |
| ஐஸ்பார் – பனிக்கட்டி |
| ஒன்வே – ஒருவழிப்பாதை |
| ஒர்க் ஷாப் – பணிமனை |
| ஒ(ஹோ)ட்டல் – உணவகம் |
| ஓப்பன் யுனிவர்சிட்டி – திறந்தவெளி பல்கலைக் கழகம் |
| ஓவர்பிரிட்ஜ் – மேம்பாலம் |
| ஓவர்டேக் – முந்துதல் |
| ஓப்பன் மார்க்கெட் – வெளிச்சந்தை |
| ஓமியோபதி – ஜெர்மனி மருத்துவம் |
| ஓவர்லாக் ஷாப் – மேல் இணைப் பொறியகம் |
| ஒயர்மேன் – மின்வினைஞர் |
| ஒயின்ஷாப் – மதுக்கடை |
| கம்ப்யூட்டர்ஸ் – கணிப்பொறியகம் |
| கவிதா கூல்ட்ரிங்ஸ் – பாவரசி சுவை நீர் நிலையம் |
| கவர்மெண்ட் – அரசு |
| கலையரசு அன்கோ – கலையரசு குழுமம் |
| கட்பீஸ் சேல்ஸ் – வெட்டுத் துணி விற்பனையகம் |
| கர்டு சேல்ஸ் – தயிர் விற்பனையகம் |
| கவுன் டிரெஸ்சஸ் – நெட்டாடை உடையகம் |
| கட் சர்வீஸ் – இடைத் திருப்பம் |
| கரன்சி – பணத்தாள் |
| கஸ்டமர் – வாடிக்கையாளர் |
| கல்யாண மகால் – திருமண மண்டபம் |
| கபீர் டெய்லர் – பேரறிஞன் தையலகம் |
| கமர் ஆர்ட்ஸ் – நிலவன் கலைக்கூடம் |
| கண்ணன் எலக்ட்ரிக்கல்ஸ் – கண்ணன் மின்பொருளகம் |
| ஒர்க்ஸ் – பணியகம் |
| காமாட்சி மேட்சிங் சென்டர் – அழகம்மை சீருடை நடுவம் |
| காஜா கம்பெனி – எரிவறி குழுமம் |
| கேஸ் சிலிண்டர் – வளியுருளை |
| கேஸ் ஸ்டவ் ஸ்டோர் – வளியடுப்பு அங்காடி |
| கான்வெண்ட் – கன்னித் துறவியர் மடம் |
| காபி பார் – குளம்பியகம் |
| காபி ஸ்டால் – குளம்பி நிலையம் |
| கால் டாக்சி – அழைப்பூர்தி |
| காட்டேஜ் இண்டஸ்ட்ரீ – வன்பேழைத் தொழிலகம் |
| கார்னர் காம்ப்ளக்ஸ் – வளைவு அடுக்ககம் |
| கார் பார்க்கிங் – உந்துகள் நிறுத்தம் |
| கார்பன் பேப்பர் – கரித்தாள் |
| கால்குலேட்டர் – கணிக்கருவி |
| கிரைண்டர் சேல்ஸ் – அரைப்பான் விற்பனையகம் |
| கிரேன் – தூக்கி |
| கிரானைட் – பளிங்குக்கல் |
| கிளீனிங் பவுடர் – கழுவுதூள் |
| கிளிப் – கவ்வி, கடி, பிடிப்பான் |
| கிரீட்டிங் கார்டு ஷாப் – வாழ்த்து அட்டைக் கடை |
| கிரிக்கெட் பேட், பால் சேல்ஸ் – மட்டை, பந்து விற்பனையகம் |
| கில்பர்டு ராட்டினம் – புகழேந்தி சுற்றாடி |
| கிருஷ்ணசாமி மெஸ் – கண்ணையன் இல்ல உணவகம் |
| கிங்ஸ் டெய்லர் – தையலகம் |
| குக்கர் சேல்ஸ் – அடுகலம் விற்பனை |
| குடோன் – கிடங்கு |
| குருமூர்த்தி புக் ஸ்டால் – குருவப்பன் நூல் நிலையம் |
| குமாரி திரட் ஸ்டோர் – குமரி நூல் அங்காடி |
| குளோரி பிளட் டெஸ்டிங் – பெரும்புகழ் குருதி ஆய்வகம் |
| குமார் டூவீலர் ஒர்க்ஸ் – குமரன் துள்ளுந்துப் பணியகம் |
| குக் – சமையல்காரர் |
| குக்கி – சமையல் |
| கூல்டிரிங்ஸ் – சுவைக் குளிர் நீர் நிலையம் |
| கூலிங் கிளாஸ் – குளிர் ஆடி |
| கூஸ் மட்டன் – வாத்து இறைச்சி |
| கெமிஸ்ட்ஸ் – மருந்துக்கடை |
| கெமிஸ்ட்ரி டெஸ்ட் – வேதியியல் ஆய்வகம் |
| கெமிக்கல்ஸ் – வேதிப்பொருளகம் |
| கெமிக்கல் ஃபேக்டரி – வேதியியல் தொழிற்சாலை |
| கெரோசின் ஸ்டோர் – மண்ணெண்ணெய் அங்காடி |
| கேக் – இனிப்புத் துண்டு |
| கேட்ரிங் காண்ட்ராக்டர் – சமயல் ஒப்பந்தக்காரர் |
| கேம்பஸ் – வளாகம் |
| கேண்டீன் – உணவகம் |
| கேரம் – நாலாங்குழி விளையாட்டு |
| கேரம்போர்டு – நாலாங்குழிப் பலகை |
| கே. கே. இண்டஸ்ட்ரீஸ் – தொழிலகம் |
| கோன் ஐஸ் – பனிக்கும்பா |
| கோர்ட் மேக்கர் – குப்பாயத் தையலர் |
| கோ ஆப் டெக்ஸ் – கூட்டுறவுத் துணிக்கடை |
| கோ ஆப்பரேடிவ் பேங்க் – கூட்டுறவு வைப்பகம் |
| கோல்டன் சலூன் – தங்கம் முடி திருத்தகம் |
| சர்வீஸ் சென்டர் – பணிநடுவம் |
| சர்வீஸ் சார்ஜ் – பணித்தொகை |
| சலூன் – முடிதிருத்தகம் |
| சந்திரன் வெஜிடேரியன் ஓட்டல் – நிலா காய்கறி உணவகம் |
| சந்திரன் நான் வெஜிடேரியன் ஓட்டல் – மதி புலால் உணவகம் |
| சலாம் லேமினேசன் – நெகிழி ஒட்டு நிலையம் |
| சலாம் பிளாஸ்டிக் மார்ட் – வணக்கம் நெகிழி அங்காடி |
| சரவணா மெடிக்கல்ஸ் – சரவணன் மருந்தகம் |
| சக்தி ப்ரொவிசன் ஸ்டோர்ஸ் – ஆற்றல் மளிகை அங்காடி |
| சரண் டிப்பன் சென்டர் – தஞ்சம் சிற்றுண்டி நடுவம் |
| சக்தி ஹோம் நீட்ஸ் ஸ்டோர் – ஆற்றல் வீட்டுப் பயன்படுப் பொருளகம் |
| சாப்ட்வேர் – மென்பொருளகம் |
| சாமில் – வாள் பட்டறை |
| சில்க் ஹவுஸ் – பட்டுமனை |
| சில்க் பேலஸ் – பட்டு மாளிகை |
| சில்க் எம்போரியம் – பட்டு வணிகம் |
| சில்ரன்ஸ் பார்க் – சிறுவர் பூங்கா |
| சிமெண்ட் ஷாப் – சுதைமா கடை |
| சிமெண்ட் பேக்டரி – சுதைமா தொழிற்சாலை |
| சிட் பண்டு – சீட்டுக் குழுமம் |
| சினிமா – திரைப்படம் |
| சினிமா டாக்கீஸ் – திரைப்படக் கொட்டகை |
| சிக்கன் – கோழி |
| சிக்கன் மட்டன் – கோழிக்கறி |
| சிட்டி ஃபோட்டோ ஸ்டூடியோ- நகர ஒளிப்பட நிலையம் |
| சில்க் ஹவுஸ் – பட்டு மாளிகை |
| சிக்கன் ஸ்டால் – கோழி இறைச்சிக்கடை |
| சிட்டி ஓட்டல் – நகர உணவகம் |
| செசன்ஸ் கோர்ட் – அமர்வு நீதி மன்றம் |
| செப்பல் ஸ்டோர் – காலணி அங்காடி |
| சோபா – மெத்தை |
| சோபா செட் – இணை மெத்தை |
| சைக்கிள் ஸ்டோர் – மிதிவண்டி அங்காடி |
| சைக்கிள் சர்வீஸ் – மிதிவண்டிப் பணியகம் |
| சைக்கிள் ஒர்க்ஷாப் – மிதிவண்டித் தொழிலகம் |
| சைக்கிள் ரிப்பேரிங் – மிதிவண்டி பழுதுநீக்கம் |
| சைக்கிள் ஸ்டாண்ட் – மிதிவண்டி நிலையம் |
| சைக்கிள் ஹையர் ஷாப் – வாடகை மிதிவண்டியகம் |
| சைக்கிள் ரிக்ஷா – மிதியிழுவை |
| சைக்கிள் கம்பெனி – மிதிவண்டிக் குழுமம் |
| சூப்பர் மார்க்கெட் – மிகு சிறப்பங்காடி |
| சூப்பர் டெய்லர்ஸ் – மிகுசிறப்புத் தையலர் |
| சூப்பர் சலூன் – மிகுசிறப்பு முடித்திருத்தகம் |
| போன்சூப் – எலும்புச் சாறு |
| சூட்கேஸ் மார்ட் – உடைப்பேழையகம் |
| பங்களா – சொகுசுமனை |
| பஜார் – சந்தை |
| பட்டா – உரிமம் |
| பட்டாணிக்கடை – உருள்கடலைக் கடை |
| பஞ்சாமிர்தம் ஸ்டோர் – ஐயமுதம் அங்காடி |
| பஞ்சாச்சரம் – ஐந்தெழுத்து அங்காடி |
| பரிமளம் ஃபிளவர் மார்ட் – நறுமணம் பூ அங்காடி |
| பங்க் ஸ்டால் – பெட்டிக்கடை |
| பப்ளிக்கேஷன் – பதிப்பகம், வெளியீட்டகம் |
| ஃபர்னிச்சர் – மரக்கலன் அங்காடி |
| ஃபயர் ஸ்டேசன் – தீயணைப்பு நிலையம் |
| பானுமதி ஃபைனான்ஸ் – கதிர்மதி வட்டிக்கடை, தண்டலகம் |
| பான்புரோக்கர் – அடகு பிடிப்பவர் |
| பார்சல் சர்வீஸ் – கட்டுகள் அனுப்பகம் |
| பாயிண்ட் டூ பாயிண்ட் – வழிநில்லாப் பேருந்து |
| பாஸ்போர்ட் ஆபீஸ் – கடவுச்சீட்டு அலுவலகம் |
| பாம்குரோவ் – பனந்தோப்பு |
| பால்ராஜ் பர்னிச்சர்ஸ் – இளவரசன் அறைகலன் |
| பாமா டீ சென்டர் – பாமா தேநீர் நடுவம் |
| ப்ளாஸ்டிக் ஸ்டோர் – நெகிழ் அங்காடி |
| ஃபார்மஸி – மருந்தகம், மருந்துக்கடை |
| ஃபாஸ்ட் ஃபுட் – உடனடி உணவகம் |
| பிக்னிக் சென்டர் – சுற்றுலா நடுவம் |
| பிளட் பேங்க் – குருதி வைப்பகம் |
| பிளாசா மார்ட் – மகிழ்வூட்டும் மாளிகை |
| பிரிண்டர்ஸ் – அச்சகம் |
| ஃபிஸ் மார்க்கெட் – மீனங்காடி |
| ஃபிரேமிங்ஸ் – சட்டமாட்டகம் |
| பீப் ஸ்டால் – மாட்டு இறைச்சிக் கடை |
| பீடா ஸ்டால் – மடி வெற்றிலைக்கடை |
| புக் போஸ்ட் – நூல் அஞ்சல் |
| புக் ஸ்டால் – நூல் நிலையம் |
| புக் ஷாப் – நூல் விற்பனையகம் |
| புக் பப்ளிகேஷன் – நூல் வெளியிட்டகம் |
| ஃபுரூட் சாலட் – பழக்கூட்டு |
| ஃபுரூட் ஜுஸ் – பழச்சாறகம் |
| ஃபுட்வேர் – காலனியகம் |
| பேட்டரி – மின்கலம் |
| பேட்டரி சார்ஜ் – மின்னேற்றகம் |
| பேப்பர் இண்டஸ்ட்ரீஸ் – தாள் தொழிற்சாலை |
| பேக்கரி – வைப்பகம், அடுமனை |
| பேப்பர் மார்ட் – தாள் விற்பனை |
| பேப்பர் ஸ்டோர்ஸ் – தாள் விற்பனையகம் |
| ஃபேசன் டெய்லர்ஸ் – புதுவகை தையலகம் |
| ஃபேன்சி ஸ்டோர்ஸ் – அழகுபொருள் அங்காடி |
| ஃபோட்டோ – ஒளிப்படம் |
| ஃபோட்டோ ஸ்டுடியோ – ஒளிப்பட நிலையம் |
| ஃபோட்டோ பிளாஸ் – ஒளிப்படகம் |
| ஃபோட்டோ டிஜிட்டல் – ஒளிப்பட நிலையம் |
| ஃபோஸ்ட் ஆபீஸ் – அஞ்சல் நிலையம் |
| டவுன் டவுன்சிப் டவுன் பஸ் ஸ்டாண்ட் – நகரப்பேருந்து நிறுத்தம் |
| டிராவல்ஸ் ஏஜென்சி – சுற்றுலா முமை |
| டிராவல்ஸ் – சுற்றுலா |
| டிராக்டர் – உழுவுந்து |
| டிரெசரி – கருவூலம் |
| டிரேடு மார்க் – வணிகக் குறி |
| டிஸ்பென்சரி – மருந்தகம் |
| டிபன் சென்டர் – சிற்றுண்டி நடுவம் |
| டிபன் ஸ்டால் – சிற்றுண்டியகம் |
| டிரேடர்ஸ் – வணிகம் |
| டிம்பர் மார்ட் – மரக்கடை |
| டிம்பர் சா மில் – மர அறுவையகம் |
| டிம்பர் – மரக்கடை |
| டீலக்ஸ் பஸ் – சொகுசுப் பேருந்து |
| டீக் டிம்பர் – தேக்கு மரம் |
| டீ ஸ்டால் – தேநீர்க் கடை |
| டீ பார் – தேநீர்க் குடில் |
| டூ வீலர் – துள்ளுந்து |
| டூ வீலர் சர்வீஸ் – துள்ளுந்துப் பணியகம் |
| டெலிபிரிண்டர் – தொலையச்சு |
| டெலிபோன் – தொலைபேசி |
| டெலிபோன் பூத் – தொலைபேசி நிலையம் |
| டெலிகிராம் சென்டர் – தொலைவரி நடுவம் |
| டெலிகிராம்ஸ் – தொலைவரி |
| டெலிகிராம் – தொலைவரி |
| டெலிபோன் எக்சேஞ் – தொலைபேசி இணைப்பகம் |
| டைட்டன் வாட்ச் சென்டர் – டைட்டன் மணிப்பொறி நடுவம் |
| டைடல் பார்க் – மென்பொருள் பூங்கா |
| டைம்பீஸ் சர்வீஸ் – மணிப்பொறிப் பணியகம் |
| டைம்பீஸ் சேல்ஸ் – மணிப்பொறி விற்பனையகம் |
| டைம் சென்டர் – மணிப்பொறி நடுவம் |
| மட்டன் ஸ்டால் – ஆட்டு இறைச்சிக்கடை |
| மதி சைக்கிள் மார்ட் – மதி மிதிவண்டி நிலையம் |
| மணிகண்டன்டிரை கிளீனிங் – மணிகண்டன் உலர் வெளுப்பகம் |
| எம்.டி.ஆர். டைம் சென்டர் – மு.த.இரா.மணிப்பொறி நடுவம் |
| மார்ட் – அங்காடி |
| மார்பிள் – பாறைக்கல் |
| மொசைக் – பளிங்குக்கல் |
| மோகன் கிளினிக் – எழிலன் மருத்துவம் |
| மிக்சி – கலக்கி |
| மில்க் குக்கர் – பால்கலன், பால் காய்ச்சி |
| மியூசிக்கல்ஸ் – இசையகம் |
| மியூசிக் அகாடமி – இசைக்கழகம் |
| மினி தியேட்டர் – சிறுதிரையரங்கம் |
| மியூசியம் – அருங்காட்சியம் |
| மிலிடெரி ஓட்டல் – புலால் உணவகம் |
| மித்திரன் பப்ளிகேஷன் – தோழன் பதிப்பகம், வெளியீட்டகம் |
| மில்க் ஸ்டோர் – பால் அங்காடி |
| மீனாட்சி பவன் – கயற்கண்ணி உணவகம் |
| மெசின் ஒர்க்ஸ் – பொறிப் பணியகம் |
| மெக்கானிக் ஷாப் – பழுது நீக்ககம் |
| மெமோரியல் ஹால் – நினைவு அரங்கம் |
| மெடிக்கல்ஸ் – மருந்தகம் |
| மெடிக்கல் ஸ்டோர் – மருந்துக்கடை |
| மொஃபசல் பஸ் ஸ்டாண்ட் – புறநகர்ப் பேருந்து நிறுத்தம் |
| மோட்டார் டீலர் – உந்தக முகவர் |
| மோட்டார் சைக்கிள் ஓர்க்ஸ் – துள்ளுந்து பழுதுநீக்ககம் |
| ரயில்வே ஸ்டேசன் – தொடர்வண்டி நிலையம் |
| ரயில்வே – இருப்புப்பாதை |
| ரப்பர் ஸ்டாம்பு ஒர்க்ஸ் – நெகிழி முத்திரை பணியகம் |
| ரமேசு இண்டஸ்ட்ரீஸ் – அழகிய நம்பி தொழிலகம் |
| ரசிகர் மன்றம் – விரும்பிகள் மன்றம் |
| ரவுண்டுச்சேர் – சுழல்நாற்காலி |
| ராசுபவன் – ஆளுனர் மாளிகை |
| ராமசாமி டி.டீ.பி. – அழகப்பன் கணினி வரைகலையகம் |
| ராசுகுமார் ஷோரூம் – இளவரசன் காட்சிக் கூடம் |
| ரிக்கார்டிங் சென்டர் – ஒலி, ஒளிப்பதிவு நடுவம் |
| ரிஜிஸ்டர் ஆபீஸ் – பதிவாளர் அலுவலகம் |
| ரியல் எஸ்டேட் – மனை விற்பனையகம் |
| ரிப்பேர் ஷாப் – பழுது நீக்கம் |
| ரீப்பேர் சேல்ஸ் – பழுதுநீக்கி விற்பனையகம் |
| ரெடிமேட் ஷாப் – ஆயத்த உடையகம் |
| ரெகுலேட்டர் சர்வீஸ் – சீராக்கிப் பணியகம் |
| ரெஸ்டாரண்ட் – உணவு விடுதி |
| ரெவின்யூ ஆபீஸ் – வருவாய் அலுவலகம் |
| ரேடியோ ரிப்பேர் – வானொலி பழுது நீக்கம் |
| ரேடியோ ஸ்டேசன் – வானொலி நிலையம் |
| ரேடியோ ஸ்டாண்ட் – வானொலி சுவர் இருக்கை |
| ரோட்டரி கிளப் – சுழற்கழகம் |
| ரைஸ்மில் – அரிசி ஆலை |
| வசந்தம் இஞ்சினியரிங் ஒர்க்ஸ் – தென்றல் பொறியியல் பணியகம் |
| விஜி கிராஃபிக்ஸ் – வெற்றிக் கணினியகம் |
| வினாயகா டீ ஸ்டால் – பிள்ளையார் தேநீர் நிலையம் |
| வினாயகா ஓட்டல் – பிள்ளையார் உணவகம் |
| வெட்டிங் கார்ட்ஸ் – திருமண அட்டைகள் |
| வேஸ்ட் பேப்பர் மார்ட் – கழிவுத்தாள் அங்காடி |
| ஸ்வீட் ஸ்டால் – இனிப்பகம் |
| ஸ்கிரீன் பிரிண்டிங் – திரை அச்சு |
| ஸ்டாம்ப் சேல்ஸ் – அஞ்சல்தலை விற்பனையகம் |
| ஸ்டேசனரி மார்ட் – எழுதுபொருள் அங்காடி |
| ஸ்டுடியோ – ஒளிப்பட நிலையம் |
| ஸ்டார் ஓட்டல் – உடு உணவகம் |
| ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்ஸஸ் – விளையாட்டு உடையகம் |
| ஸ்நேக்கார் – நொறுக்குத் தின்பகம் |
| ஜவுளி ஸ்டோர் – துணிக்கடை, துணி அங்காடி |
| ஜுவல்லரி மார்ட் – அணிமணி அங்காடி |
| அறைகலன் பர்னிச்சர் மார்ட் – அறைகலன் அங்காடி |
| சோகேஸ் – காட்சிப்பெட்டி |
| சோபா – சொகுசு இருக்கை |
| மெத்தை – படுக்கை அணை |
| பெட் – படுக்கை |
| ஈசிச்சேர் – சாய்வு இருக்கை |
| சேர் – நாற்காலி |
| டேபிள் – மேசை (மிசை) |
| பீரோ – நிலைப்பேழை |
| கேஷ் பாக்ஸ் – பணப்பெட்டி |
| ஸ்டூல் – முட்டான் |
| ரெக்சீன் சீட் – நெகிழ் உறை |
| ஸ்பாஞ்சு – தொய்வைப் பஞ்சு |
| பெட்சீட் – படுக்கை விரிப்பு |
| பிலேன் டேபில் – மொக்கட்டை மேசை |
| டிராவ் டேபில் – இழுவறை மேசை |
| டிம்பர் பீரோ – மர நிலைப்பேழை |
| டி.வி. டேபிள் – தொலைக்காட்சிப் பெட்டி மேசை |
| சீவரி சிப்ஸ் – சீவரி |
| மசாலா சிப்ஸ் – மசாலா சீவரி |
| டுமாட்டோ சிப்ஸ் – உருளைக்கிழங்கு சீவரி |
| ஆனியன் சிப்ஸ் – வெங்காயச் சீவரி |
| ஆட்டன் ஸ்வீட்ஸ் – இனிப்புச் சீவரி |
| ஆசுட்ரெலியன் – கலவைச் சீவரி |
| ஆர்.சி.சி. சிப்சு – குச்சிக் காரம் சீவரி |
| ஆல்பூசா – பொடி சீவரி |
| சால்ட்டு சிப்ஸ் – உப்புச் சீவரி |
| மசாலா குச்சி – மசாலா குச்சிச் சீவரி |
| டுசுட்டி சிப்ஸ் – இச்சி முறுக்குச் சீவரி |
| சில்லிபேட்சு – குச்சிப் பட்டைச் சீவரி |
| சாசுப்பட்டா – தடிப் பட்டைச் சீவரி |
| பேஸ் லூப் – வட்டச் சீவரி |
| ரெயிம்சு – முக்கோணச் சீவரி |
| லைட்சு – வத்தல் சீவரி |
| சல்புல்லி மிக்சர் – கலவைச் சீவரி |
| பழச்சாறு விற்பனையகம் |
| ஜுஸ் ஸ்டால் – பழச்சாறு அங்காடி |
| கூல் டிரிங்ஸ் – குளிர்ச் சுவைநீர் நிலையம் |
| மேங்கோ ஜுஸ் – மாம்பழச் சாறு |
| லெமன் ஜுஸ் – எலுமிச்சம்பழச் சாறு |
| ஆரஞ்சு ஜுஸ்- செம்பழச் சாறு |
| பைனாப்பின் ஜுஸ் – அன்னாசிப்பழச் சாறு |
| ஃபுரூட் மிக்ஸர் – கலவை பழச்சாறு |
| ரோஸ்மில்க்ஸ் – செம்பால் |
| பாதாம் கீர் – பாதாம்பருப்புப் பால் |
| சர்பத் – நன்னாரி வேர்ச் சாறு |
| கலர் சோடா ஐஸ் – வளிச் சுவை நீர் |
| ஆஅ- மென்சுவைப் பால் |
| ஆ- வளி நீர் |
| பனிக்கட்டி – நீர்க்கட்டி, குளிர் கட்டி, |
| கிளாஸ் – கண்ணாடிக் குவளை |
| ஸ்ட்ரா – உறிஞ்சுகுழல் |
| மசால் மில்க் கிரேடு – மசாலாப் பால் |
| மளிகை ஸ்டோர் – மளிகை கடை |
| டூத் பிரஸ் – பல் துலுக்கி |
| டூத் பவுடர் – பற்பொடி |
| பாத் சோப் – குளியல் வழவை |
| வாஷிங் சோப் – துணி வழவை |
| ஷேவிங் பிளேடு – முகமழிப்பான் |
| ரைஸ் – அரிசி |
| டீ தூள் – தேயிலைத் தூள் |
| காப்பித் தூள் – குளம்பித் தூள் |
| பிஸ்கட் – மாவுச்சில், ஈரொட்டி |
| மிட்டாய் – இனிப்பு வில்லை |
| தனியா – கொத்தமல்லி |
| ஆயில் – எண்ணெய் |
| மில்க் – பால் |
| பட்டாணி – உருள் கடலை |
| சாக்லெட் – இனிப்பு வில்லை |
| டெலிபோன் பூத் – தொலைபேசித் தொடர்பகம் |
| பி.சி.ஓ. – உள்ளூர் பேசி |
| எஸ்.டி.டி. – உள்நாட்டுப் பேசி |
| ஐ.எஸ்.டி. – பன்னாட்டுப் பேசி |
| போன் – பேசி |
| டெலிபோன் – தொலைபேசி |
| செல்போன் – செல்லிடப் பேசி, கை பேசி |
| ஒயர்லெஸ் – அலைபேசி |
| ரிங் – ஒலி |
| ஹலோ – வணக்கம் |
| டெலிபோன் கால் – தொலைபேசி அழைப்பு |
| எக்ஸ்டெண்ட் – நீட்டிப்பு |
| லாக் – அடைப்பு |
| லைன் கட் – தொடர்பு துண்டிப்பு |
| என்கேஜ்டு – பயன்பாட்டில் உள்ளது |
| மவுண்ட் ரோடு – அண்ணாசலை |
| பி.ஹெச். ரோடு – பெரியார் சாலை |
| பாண்டி பஜார் – பண்டியன் கடைத்தெரு |
| பர்மா பஜார் – பர்மியர் கடைத்தெரு |
| கே.கே. ரோடு – க.க.சாலை |
| எம்.ஜி.ஆர். ரோடு – ம.கோ.இரா. சாலை |
| பெல்ஸ் ரோடு – செகசீவன்ராம் சாலை |
| உஸ்மான் ரோடு – உசுமான் சாலை |
| பீச் ரோடு – கடற்கரைச் சாலை |
| காம்ப்ளக்ஸ் – அடுக்ககம் |
| தியேட்டர்- திரையரங்கம் |
| டூ வீலர் ஒர்க்ஷாப் – இருசக்கர பழுதுநீக்கியகம் |
| ஜீவல்லரி – நகை மாளிகை |
| ரெடிமேடு – ஆயத்த ஆடையகம் |
| சில்க் ஸ்டோர் – துணியகம் |
| பிரிண்டர்ஸ் – அச்சகம் |
| ஒர்க் ஷாப் – பட்டறை |
| ஏஜென்சீஸ் – முகவாண்மை |
| லாட்ஜ் – தங்கும் விடுதி |
| பேன்சி ஸ்டோர் – புதுமைப் பொருளகம் |
| எலக்ட்ரானிக்ஸ் – மின்னியல் வணிகம் |
| பேக்கரி – அடுமனையகம் |
| டீஸ்டால் – தேநீரகம் |
| டிபன் கடை – சிற்றுண்டியகம் |
| ஓட்டல் – உணவகம் |
| ஷூ மார்ட் – காலணியகம் |
| டிரேடர்ஸ் – வணிக மையம் |
| ஸ்டோர்ஸ் – பண்டகசாலை |
| டிராவல்ஸ் – பயண ஏற்பாட்டகம் |
| ஸ்டுடியோ – ஒளிப்பட நிலையம் |
| பர்னிச்சர் மார்ட் – அறைகலன் அங்காடி |
| ஜெராக்ஸ் – நகலகம் |
| ஷோரும் – காட்சிக்கூடம் |
| நர்சிங் ஹோம் – நலம் பேணகம் |
| பார்சல் சர்வீஸ் – சிப்பம் / கட்டுகை அனுப்பகம் |
| எண்டர்பிரைசஸ் – தொழிற் முனையகம் |
| ஜெனரல் ஸ்டோர் – பல்பொருள் அங்காடி |
| டெய்லர்ஸ் – தையலகம் |
| ஆட்டோமொபைல்ஸ் – தானியங்கி உதிரிப்பொருட்கள் விற்பனையகம் |
| பேட்டரி சர்வீஸ்- மின்கலன் சேவையகம் |
| கஃபே – அருந்தகம் |
| அக்ரோ சென்டர் – வேளாண்மை நடுவம் |
| கூல்டிரிங்க்ஸ் – குளிர்பான சுவைப்பகம் |
