| பிறமொழிச் சொற்கள் | தமிழில் |
| அக்னி குண்டம் இறங்குதல் | தீ மிதித்தல் / பூ மிதித்தல் /பூக்குழி இறங்குதல் |
| அங்க பிரதட்சணம் | உருள் தண்டம் |
| அதிட்டானம் | அடித்தளம் |
| அபிஷேக பாத்திரம் | படிக்கம் |
| அபிஷேக மண்டபம் | திருமஞ்சன சாலை |
| அபிஷேகம் | முழுக்கு |
| அம்பலம் | கோயில் |
| அருட்பிரசாதம் | திருச்சோறு |
| அர்ச்சனை | போற்றி |
| அர்த்த மண்டபம் | அரை மண்டபம் (உண்ணாழிகைக்கு ஒட்டியுள்ள மண்டபம்) |
| அலங்காரம் | அணிவித்தல் / அழகுபடுத்துதல் / ஒப்பனை |
| அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் | மூர்த்தங்களின் திருமேனி அசையாதிருக்க எண்வகை மருந்துகளால் சார்த்தபட்டு குடமுழுக்கு செய்தல் |
| ஆபரணம் | அணிகலன் |
| ஆரம்பம் | தொடக்கம் |
| ஆராதனை | பூசனை |
| ஆலயம் | கோயில் |
| உபயதாரர் | கொடையாளர் |
| உபயதாரர்கள் | கொடையாளர்கள் |
| உற்சவ மூர்த்தி | எழுந்தருளுந் திருமேனி / உலா திருமேனி |
| கர்ப்பகிரக பிரகாரம் | திருச்சுற்று |
| கர்ப்பகிரகம் | உண்ணாழிகை |
| கலசம் | குடம் |
| கனக சபை | பொன்னம்பலம் |
| கஜானா | பண்டாரம் / கருவூலம் |
| கிரஹபிரீத்தி | கோள்களின் பயன் |
| கிராமவாசிகள் | ஊர்மக்கள் |
| கிரிவலம் | மலைச்சுற்று / மலைவலம் |
| கும்பாபிஷேகம் | குடமுழுக்கு / நீராட்டு / நீர்த்தெளி |
| கோபுரம் (தமிழ்) | உயர்நிலை வாயில் / கோபுரம் |
| கோவில் | கோயில் |
| சங்கல்பம் | உறுதிமொழி |
| சஞ்சீவி | மூலிகை / மருந்து |
| சடங்கு | செயல்முறை |
| சமர்ப்பணம் | ஒப்படைத்தல் /அட்டல் |
| சன்னதி | திருமுற்றம் |
| சாத்துபடி | சாற்றுபடி |
| சேவித்தல் | வணங்குதல் |
| தட்சனை | அன்பளிப்பு |
| தட்சிணாமூர்த்தி | தென்திசைக் கடவுள் /ஆலமர் செல்வன் |
| தம்பதி பூஜை | இணையர் வழிபாடு |
| தரிசனம் | காட்சி |
| தர்மகர்த்தா | அறங்காவலர் |
| திரவ்யா ஹூதி | பொருள் வழிபாடு |
| திராவிட கட்டடக் கலை | தமிழர் கட்டடக் கலை |
| தினசரி பூஜை | நாட்பூசனை |
| தீபஸ்தம்பம் | விளக்குத்தூண் |
| தீபஸ்தானம் | விளக்கு தண்டு |
| தீபாராதணை | ஒளி வழிபாடு |
| தீர்த்தமாடுதல் | நீராடுதல் |
| தீவட்டி | திருவீதிப்பந்தம் / கைவிளக்கு |
| துவார பாலகர் | வாயிற்காவலர் |
| துவாஜாரோஹணம் | கொடியேற்றம் |
| நடராஜன் | ஆடலரசன் / தில்லைக் கூத்தன் / ஆடல் வல்லான் / கூத்தன் |
| நந்தவனம் | பூந்தோட்டம் / திருத்தோப்பு |
| நர்த்தனம் | ஆடல் |
| நிவேதன உணவு | திருவமுது |
| நேர்த்தி / நிவர்த்தி கடன் | நன்றிக் கடன் |
| பக்த கோடிகள் | மெய்யன்பர்கள் |
| பஞ்ச திரவியம் | ஐம்பொருள்கள் |
| பட்சணம் | சிற்றுணவு / திண்பண்டம் /நொறுவை |
| பத்திரிக்கை | அழைப்பிதழ் / தாழிகை |
| பிரகதீஸ்வரர் கோவில் | பெருவுடையார் கோயில் |
| பிரகார ஆலயம் | திருச்சுற்று கோயில் |
| பிரசாத விநியோகம் | திருக்கைவழக்கம் |
| பிரசாதம் | திருச்சோறு / அமுது |
| பிரதான வாசல் | பெருவாயில் / முதன்மை வாயில் |
| பிரதிஷ்ட்டை | எழுந்தருளவித்தல் |
| பிரபலமான கோவில் | புகழ்பெற்றக் கோயில் / பேர்பெற்ற |
| பிரமாண்டம் | மிகப்பெரிய |
| பிரமிப்பு | திகைப்பு / வியப்பு |
| பிரவேசம் | புகுதல் |
| பிரஹாரம் | திருச்சுற்று |
| புண்ணிய சேத்திரம் | நலம் தரும் கோயில் |
| புனராவர்தனம் | திருத்தப்பணி செய்த |
| புனித யாத்திரை | திருக்கோயில் செலவு(பயணம்) |
| புஷ்பம் | பூ / மலர் |
| பூரண கும்பம் | நிறைகுடம் |
| பூர்ணம் | முழுமை |
| பூர்ணாஹூதி | நிறைவு செய்த |
| பூஜித்தல் | வழிபடுதல் |
| பூஜை | பூசை (பூ இட்டு வழிபடுதல்) |
| போஜன சாலை | உணவுச் சாலை |
| மகா கும்பாபிஷேகம் | குடமுழுக்கு / நீராட்டு / நன்நீராட்டு |
| மங்கள இசை | மங்கல இசை |
| மடைப்பள்ளி (தமிழ்) | அடுக்களை |
| மண்டல பூஜை | ஒரு மண்டல வழிபாடு(48 நாள்கள்) |
| மண்டலாபிஷேகம் | மண்டலத்திருமுழுக்கு |
| யாக சாலை | வேள்விக் கூடம் |
| யாகசாலை | உருவேற்றுப் பந்தல் |
| யாத்திரை | பயணம் / செலவு |
| யாத்ரா தானம் | பயண அன்பளிப்பு |
| ரக்ஷாபந்தனம் | காப்புக்கட்டுதல் |
| லக்ஷ்மி | பூமகள் |
| வஸ்திரம் | திருவாடை / ஆடை |
| வாத்திய கோஷ்டி | சீபலிகொட்டுவார் |
| விக்கிரகம் | திருமேனி |
| விசேஷம் | சிறப்பு |
| விபூதி | திருநீறு |
| விமானம் | மேல் நிலை |
| வீரலக்ஷ்மி | போர்த்தனிப்பாவை / போர்மகள் |
| வேதம் | மறை |
| ஜலபவித்திரம் | முழுக்கு நேர ஆடை |
| ஜீர்னோதாரணம் | புதுப்பித்தக் கோயில் குடமுழுக்கு |
| ஸ்தபதி | பெருந்தச்சன் |
| ஸ்தல புராணம் | கோயில் வரலாறு |
| ஸ்தல விருட்சம் | கோயில் தரு, கோயில் மரம் |
| ஸ்தலம் | இடம் |
| ஸ்தூபிக்குடம் | கலசம் |
| ஸ்பர்ஷா ஹூதி | உணர் வழிபாடு |
| ஷேத்திரம் | கோயில் கொண்ட ஊர் |
| ஹனுமான் | சஞ்சீவராயர் |
| பிரதட்சணம் | வலம் வருதல் |