Sunday, 1 March 2026

Contact Info

  • ADDRESS: Street, City, Country

  • PHONE: +(123) 456 789

  • E-MAIL: your-email@mail.com

  • Home  
  • மயங்கொலிகள் 2025

மயங்கொலிகள் 2025

மயங்கொலிச் சொற்கள்

வ.எண்மயங்கொலிச் சொற்கள்பொருள்
1அணல்  தாடி, கழுத்து
2அனல்  நெருப்பு, தீ, சூடு
3அணி  அழகு
4அனி  நெற்பொறி
5அணு திண்மம்
6அனு  தாடை, தனிமை
7அணுக்கம்  அண்டை, அண்மை.
8அனுக்கம்  வருத்தம், அச்சம்
9அணை   அணைத்தல்
10அனை  அன்னை, மீன்
11அணைய  சேர, அடைய
12அனைய  அத்தகைய
13அண்மை  அருகில்
14அன்மை  தீமை, அல்ல
15அங்கண்  அவ்விடம்
16அங்கன்  மகன்
17அண்ணம்  மேல் உள்வாய்
18அன்னம்  சோறு, அன்னப்பறவை
19அண்ணன்  மூத்த உடன்பிறந்தோன்
20அன்னன்  அத்தகையவன்
21அவண்  அவ்வாறு, அங்கே
22அவன்  ஆண்மகன் (தூரச் சுட்டு)
23ஆணகம்  சுரை
24ஆனகம்  துந்துபி
25ஆணம்  பற்றுக்கோடு
26ஆனம்  தெப்பம், கள்
27ஆணி  எழுத்தாணி, இரும்பு ஆணி
28ஆனி  தமிழ் மாதம்
29ஆணேறு  ஆண்மகன்
30ஆனேறு  காளை, எருது
31ஆண்  ஆடவன்
32ஆன்  பசு
33ஆணை  கட்டளை, ஆட்சி
34ஆனை  யானை
35இணை  துணை, இரட்டை
36இனை  இன்ன, வருத்தம்
37இணைத்து  சேர்த்து
38இனைத்து  இத்தன்மையது
39இவண்  இவ்வாறு
40இவன்  ஆடவன், (அண்மைச் சுட்டு)
41ஈணவள்  ஈன்றவள்
42ஈனவள்  இழிமகள்
43உண்  உண்ணக்கூறுதல்
44உன்  உன்னுடைய
45உண்ணல்  உண்ணுதல்
46உன்னல்  நினைத்தல்
47உண்ணி அதிகமாக உண்பவன், ஒருவகைப் பூச்சி
48உன்னி  நினைத்து, குதிரை
49ஊண்  உணவு
50ஊன்  இறைச்சி
51எண்ண  நினைக்க
52என்ன  போல, வினாச்சொல்
53எண்ணல்  எண்ணுதல்
54என்னல்  என்று சொல்லுதல்
55எண்கு  கரடி
56என்கு  என்று சொல்லுதல்
57ஏண்  வலிமை
58ஏன்  வலிமை, ஒரு வினைச்சொல்
59ஏணை துணித் தொட்டில்
60ஏனை  மற்ற
61ஐவணம்  ஐந்து வண்ணம்
62ஐவனம்  மலை நெல்
63ஓணம்  ஒரு கேரளப் பண்டிகை
64ஓனம் எழுத்தின் சாரியை 
65கணகம்  ஒரு படைப்பிரிவு
66கனகம்  பொன்
67கணப்பு  குளிர்காயும் தீ
68கனப்பு  பாரம், அழுத்தம்
69கணி  கணித்தல்
70கனி  பழம்
71கணம்  பொழுது, கூட்டம்
72கனம் எடை
73கண்ணன் மாயோன்
74கன்னன்  கர்ணன்
75கண்ணி  மாலை, கயிறு, தாம்பு
76கன்னி  குமரிப்பெண், இராசி
77கணை  அம்பு
78கனை  ஒலி, கனைத்தல்
79கண்  பார்வை உறுப்பு
80கன்  கல், செம்பு, உறுதி
81கண்று  அம்பு
82கன்று  இளஞ்செடி, மாட்டின் குட்டி
83கண்ணல்  கருதல்
84கன்னல்  கரும்பு, கற்கண்டு
85காண்  பார்த்தல்
86கான்  காடு
87காணம்  பொன், கொள்ளு
88கானம்  இசை, காடு,  தேர்
89காணல்  பார்த்தல்
90கானல்  பாலை, வெற்று நீர்
91கிணி  கைத்தாளம்
92கினி  பீடை
93கிண்ணம்  வட்டில், கிண்ணி
94கின்னம்  கிளை, துன்பம்
95குணி  வில், ஊமை
96குனி  குனிதல், வளைதல்
97குணித்தல்  மதித்தல், எண்ணுதல்
98குனித்தல்  வளைதல்
99குணிப்பு  அளவு, ஆராய்ச்சி
100குனிப்பு  வளைப்பு, ஆடல்
101கேணம்  செழிப்பு, மிகுதி
102கேனம்  பைத்தியம், மனநலக் குறைவு
103கேணி  கிணறு
104கேனி மனநலம் பாதிக்கப்பட்டவர்
105கோண்  கோணல்
106கோன்  அரசன்
107சாணம்  சாணை பிடித்தல்,  மாட்டின் சாணி
108சானம்  அம்மி, பெருங்காயம்
109சுணை  கூர்மை, கரணை
110சுனை  நீரூற்று
111சுண்ணம்  கையால் இடிக்கும் வாசனைப் பொடி
112சுன்னம்  சுண்ணாம்பு, சூழியம்
113சேணம்  மெத்தை
114சேனம்  பருந்து
115சேணை  அறிவு
116சேனை  படை, ஒருவகைக் கிழங்கு
117சோணம்  பொன், சிவப்பு, தீ, சோணமலை
118சோனம்  மேகம்
119சோணை  ஒரு நதி, சேரன் மனைவி
120சோனை  மழைச்சாரல், மேகம்
121தண்  குளிர்ச்சி
122தன்  தன்னுடைய
123தணி  தணித்தல்
124தனி  தனிமை
125தாணி  தான்றிமரம், மூன்று சக்கர ஊர்தி
126தானி  இருப்பிடம், பண்டசாலை
127தாணு  சிவன், தூண், நிலைப்பேறு
128தானு  காற்று
129திணை  ஒழுக்கம், குலம்
130தினை    ஒருவகைப் சிறுகூலப் பயிர்
131திண்மை  உறுதி
132தின்மை  தீமை
133திண்  வலிமை
134தின்  உண்பது
135துணி  துணிதல், சவளி
136துனி  அச்சம், ஊடல் நீட்டித்தல்
137தெண்  தெளிவு
138தென்  தெற்க திசை,  அழகு
139நண்பகல்  நடுப்பகல்
140நன்பகல்  நல்லபகல்
141நணி  அணி (அழகு)
142நனி  மிகுதி
143நாண்  வெட்கம், கயிறு
144நான்  தன்மைப் பெயர்
145நாணம்  வெட்கம்
146நானம்  புனுகு, கவரிமான்
147பணி  வேலை, கட்டளையிடு
148பனி  துன்பம், குளிர், சொல், நோய்
149பணை  முரசு, உயரம், பரந்த
150பனை  ஒருவகை மரம்
151பண்  இசை
152பன்  அரிவாள், பல
153பண்ணை  தோட்டம்
154பன்னை  கீரைச்செடி
155பண்ணுதல்  செய்தல்
156பன்னுதல்  நெருங்குதல்
157பண்ணி  செய்து
158பன்னி  சீப்பு, பனிநீர், மனை, சணல்,பன்றி
159பண்மை  தகுதி
160பன்மை  பல
161பணித்தல்  கட்டளையிடுதல்
162பனித்தல்  துளித்தல், தூறல், விரிந்த
163பட்டணம்  நகரம்
164பட்டினம்  கடற்கரை நகர்
165பாணம்  நீருணவு
166பானம்  அம்பு
167புணை  தெப்பம்
168புனை  இட்டுக்கட்டுதல், கற்பனைப் புனைவு
169புண்  காயம்
170புன்  கீழான
171பேணம்  பேணுதல்
172பேனம்  நுரை
173பேண்  போற்று, உபசரி
174பேன்  ஓர் உயிரி
175மணம்  வாசனை, திருமணம்
176மனம்  உள்ளம், இந்துப்பு
177மணை  மரப்பலகை, மணவறை
178மனை  இடம், வீடு
179மண்  தரை, மண்வகை
180மன்  மன்னன், பெருமை
181மண்ணை  இளமை, கொடி வகை
182மன்னை  தொண்டை, கோபம்
183மாணி  அழகு, பிரம்மசாரி
184மானி  மானம் உடையவர், அளவிடும் கருவி
185மாண்  மாட்சிமை
186மான்  ஒரு விலங்கு
187முணை  வெறுப்பு, மிகுதி
188முனை  முன்பகுதி, துணிவு, முதன்மை
189வணம்  ஓசை
190வனம்  காடு, துளசி, கான்
191வண்மை  வளப்பம், கொடை
192வன்மை  உறுதி, வலிமை
193வண்ணம்  நிறம், குணம், அழகு
194வன்னம்  எழுத்து, நிறம்
195வாணகம்  அக்கினி, பசுமடி
196வானகம்  மேலுலகம்
197வாணம்  அம்பு, தீ, மத்தாப்பு
198வானம்  வான், மழை
199வாணி  கலைமகள், திருமகள்
200வானி  துகிற்கொடி
201அலகு  பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
202அழகு வடிவு
203அளகு  சேவல், பெண்கூகை
204அலகம்  திப்பிலி
205அளகம்  வெள்ளெருக்கு, தண்ணீர்
206அலகை  கற்றாழை, பேய்
207அளகை  அளகாபுரி, பெண்
208அலம்  கலப்பை
209அளம்  உப்பு ஏரி
210அலத்தல்  அலட்டல், அலைதல்
211அளத்தல்  அளவிடுதல், மதித்தல்
212அலவன்  ஆண்நண்டு
213அளவன்  அளப்பவன், உப்பு எடுப்போன்
214அழி  அழித்துவிடு
215அலி  பேடி, காகம்
216அளி  கருணை, கள், வண்டு, கொடு
217அல்லல்  துன்பம்
218அள்ளல் அள்ளிக் கொள்ளுதல்
219அழை  கூப்பிடுதல்
220அலை  கடல், நீரலை, அலைதல்
221அளை  தயிர், நண்டு, புற்று
222அவல்  பள்ளம், உணவுப் பொருள்
223அவள்  பெண்
224அல்  இரவு
225அள்  அள்ளி எடு, நெருக்கம்
226உலவு  நடத்தல்
227உளவு  ஒற்று, கமுக்கப் படை
228உழவு   உழுதல்
229உழி  இடம், பொழுது
230உளி  தச்சுக் கருவிகளுள் ஒன்று
231உலு  தானியப் பதர்
232உழு  நிலத்தை உழுதல்
233உளு  உளுத்துப் போதல்
234உலை  உருக்கு உலை, நீருலை
235உழை  பாடுபடு, பக்கம், கலைமான்
236உளை  பிடரி மயிர், சேறு, தலை
237உழுவை  புலி
238உளுவை  மீன்வகை
239எல்  கல், மாலை, சூரியன்
240எள்  எண்ணெய் வித்து, எள்ளி நகையாடுதல்
241எலு  கரடி
242எழு  எழுந்திரு, தூண்
243ஒலி  ஓசை, காற்று
244ஒழி  அழி, தவிர், கொல், துற, ஒழித்தல்
245ஒளி  வெளிச்சம், மறைத்து வைத்தல்
246ஒல்  ஒலிக்குறிப்பு
247ஒள்  அழகு, உண்மை, அறிவு, ஒளி
248கலகம்  போர், அமளி, இரைச்சல்
249கழகம்  சங்கம், கூட்டமைப்பு
250கழங்கம்  கழங்கு, விளையாட்டுக் கருவி
251களங்கம்  குற்றம், அழுக்கு
252கலி  கலியுகம், பாட்டு வகை, சனி
253கழி  கோல், மிகுதி, கடலின் கழிமுகம்
254களி  மகிழ்வு, இன்பம், கொண்டாட்டம்
255கலை  ஆண்மான், சந்திரன், கல்வி
256கழை  மூங்கில், கரும்பு, கூத்து
257களை  அழகு,  பயிரின்  இடை புள்
258கல்  மலை, பாறை, சிறுகல்
259கள்  உணவுப்பொருள்,  தேன், பனை தென்னை சாறு
260கலம்  கப்பல், பாத்திரம்
261களம்  இடம், போர்க்களம், இருள்
262காலி  ஒன்றுமில்லாதது, வெற்றிடம்
263காளி  துர்க்கை, மாயை
264காழி  சீர்காழி 
265காலை  பொழுது, விடியற்பொழுது
266காளை  காளைமாடு, இளைஞன்
267காலம்  பொழுது, நேரம்
268காளம்  எட்டிமரம், சூலம்
269கிலி  அச்சம், பயம்
270கிழி  கிழித்தல்,  பொன் முடிப்பு
271கிளி  பறவை, வெட்டுக்கிளி
272கிழவி  முதியவள், மூதாட்டி
273கிளவி  சொல், மொழி
274குலி  மனைவி
275குழி  பள்ளம், பாத்தி, 12 *1 2 அடி பரப்புளவு  
276குளி நீராடுதல்
277குலம்  இனம், குடி
278குளம் நீர்நிலை, பெரியக் குட்டை
279குலை  கொத்து, நிலை குலைதல்
280குழை  குண்டலம், குழைந்துபோதல்
281குலவி  மகிழ்ந்திருத்தல்
282குழவி  குழந்தை, இளமை, அம்மிக்கல்
283குளவி  ஒரு வண்டு, காட்டுமல்லி
284குலிகம் சிவப்பு, இலுப்பை
285குளிகம் மருந்து, மாத்திரை
286குவலை துளசி, கஞ்சா
287குவளை  குவளை மலர், செம்பு
288கூலம்  சிறு தானியம், கடைத்தெரு
289கூளம்  குப்பை
290கூலி  ஊதியம்
291கொலு  அரசசபை,   வீற்றிருத்தல்
292கொழு  மழு, கலப்பையின் இரும்பு முனை,  கொழுத்து இருத்தல்
293கொளு  புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்
294கொலை  கொல்லுதல்
295கொளை  கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம்
296கொல்லாமை  கொலை செய்யாமை
297கொள்ளாமை  ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை
298கொல்லி  உயிர்க்கொல்லி, கொல்லி மலை
299கொள்ளி  கொள்ளிக்கட்டை
300கொல்லை  புழக்கடை,  நிலம்
301கொள்ளை  திருடுதல், மிகுதி
302கோலம்  அழகு,  கோலம் போடுதல்
303கோளம்  உருண்டை, வட்டம்
304கோலை  மிளகு
305கோழை  வீரமற்றவன், கபம்
306கோளை  குவளை, எலி
307கோல்  மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
308கோள் விண் கோள்கள்
309கோலி  இலந்தை, விளையாடும் குண்டு
310கோழி  உறையூர், விட்டில், பறவை
311கோளி  பூவாது காய்க்கும் மரம்,  அத்தி, ஆலம்
312சலம்  நீர், சிறுநீர், குளிர்
313சளம்  பொய், துன்பம், வஞ்சனை
314சாலை  பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம்
315சாளை  கடல்மீன்
316சாழை  குடிசை, குச்சு
317சுழித்தல்  சுழலுதல், நீர்ச்சுழல்
318சுளித்தல்  முறித்தல், சினத்தல்
319சூலை  வயிற்று நோய், ஆங்கில மாதம்
320சூளை  செங்கல், சுண்ணாம்பு சூளை
321சூல்  கருத் தரித்தல்
322சூழ்  சூழ்ந்துகொள், சுற்று
323சூள்  சபதம்
324சேல்  மீன்
325சேள்  மேலிடம்
326சோலி  இரவிக்கை, வேலை
327சோழி  பலகரை
328சோளி  கூடைவகை
329தவளை நீரிலும் நிலத்திலும் வாழும் ஓர் உயிரினம்
330தவலை ஒரு வகை  பாத்திரம்
331தலம்  இடம், ஊர்
332தழம்  தைலம்
333தளம்  மேடை, மாடி வீட்டின் கூரை
334தழை தழைத்தல், ஆட்டுக்கு கொடுக்கும் தாவர உணவு
335தலை  மண்டை
336தளை  விலங்கு
337தாலம்  உலகம், தேன்
338தாளம்  தாள இசைக்கருவி, இசைக்கட்டு
339தாலி  மங்கலநாண்
340தாழி  கடல், குடம்,  பெரியபாண்டம்
341தாளி  தாளித்தல், பனைதால் 
342தாழ்  தாழ்தல், குனிதல், அடைக்கும் தாழ்
343தாள்  முயற்சி, பாதம், ஆதி, படி,  எழுதும் தாள்
344துலக்கம்  ஒளி, தெளிவு
345துளக்கம்  அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி
346துலம்  கோரை, கனம்
347துளம்  மாதுளை, மயிலிறகு
348துலி  பெண் ஆமை
349துழி  பள்ளம்
350துளி  மழைத்துளி, திவலை, சிறிய அளவு
351துலை  ஒப்பு, கனம்
352துளை  ஓட்டை, வாயில்
353தூலி  எழுதுகோல், எழுத்தாணி
354தூளி  புழுதி, குதிரை, குழந்தைகளின் தூளி
355தெழித்தல்  கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
356தெளித்தல்  விதைத்தல், சபதம், கூறல், தூவுதல்
357தெல்  அஞ்சுதல்
358தெள்  தெளிவு
359தோலன்  அற்பன்
360தோழன்  நண்பன்
361தோலி  பிசின், ஒருவகை மீன்
362தோழி  பாங்கி, நண்பி
363தோளி  அவுரிச்செடி, அரக்கு
364தோல்  உடலின் மேல் தோல், வடிவு, தானியத்தின் மேல்பகுதி
365தோள்  உடலின் தோள் பகுதி, வீரம்
366நலன்  நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம்
367நளன்  தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
368நலி உடல் நலிவுறுதல்
369நளி  குளிர்ச்சி, பெருமை
370நலிதல்  நலிந்துபோதல், தோற்றல்
371நளிதல்  செறிதல், பரத்தல், ஒத்தல்
372நல்  நல்ல
373நள்  இரவு, நடு, நள்ளிரவு
374நாலம்  பூவின் காம்பு
375நாழம்  இழிவுரை, வசவு
376நாளம்  பூந்தண்டு, உட்துளை, குருதி நாளம்
377நாலி  முத்து, கந்தலாடை
378நாழி  உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, நாழிகை
379நாளி  கல், நாய்
380நாலிகை  மூங்கில், அடுப்புச்சந்து
381நாழிகை  வட்டம், நேர அளவு
382நால்  நான்கு
383நாழ்  குற்றம், செருக்கு
384நாள்  காலம், 24 மணி நேர காலம்
385நீலம்  ஒரு நிறம், கருங்குவளை, இருள்
386நீளம் நீண்ட, தாமதம், அளவை அலகு
387நீல்  நீலம், காற்று
388நீள்  நீளம், ஒளி
389பலம்  கிழங்கு, வலிமை, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை
390பழம்  கனி, முதுமை
391பல்லி  சிற்றூர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு
392பள்ளி இசுலாமியர் வழிபடும் இடம்,  மருதநிலத்தூர், படுக்கை, கல்விக்கூடம்
393பலி  பலியிடுதல், பலியுயிர்
394பழி  குற்றம், அவதூறு
395பால்   உணவு, பகுப்பு, இயல்பு, பாலினம்
396பாழ்  வீண், வெறுமை
397பீழை  துன்பம்
398பீளை  கண் அழுக்கு
399புலி  காட்டு விலங்கு, சோழ மன்னனின் இலச்சினை
400புளி  புளியமரம், புளிப்புச் சுவை
401புலை  புலால், ஊன், கீழ்மை
402புழை  துளை, வாயில், நரகம்
403புகல் புகுதல், குடிபுகல்
404புகழ்  பெருமை
405புல்  அற்பம், கலவி, புல்பூண்டு
406புள்  பறவை,புள்ளினம்
407பூலம்  புற்கட்டு
408பூளம்  பூவரசு
409பூழை  துளை, கோபுரவாயில்
410பூளை  பூளைச்செடி, இலவம் பஞ்சு
411பாலி  தானியக் குவியல், தூற்றாத தானியம்
412பாழி  கொடுத்தல், ஈதல்
413பாளி  வரப்பு, எல்லை
414பாலிவு  அழகு, நிறைவு, பொலிவு
415பாழிவு  பொழிதல், மேன்மை
416போலி  பொய், வஞ்சகம், ஒப்பு
417போளி  இனிப்புப் பண்டம்
418பொலிதல்  செழித்தல், மங்கலமாதல்
419பொழிதல்  ஈதல், கொடுத்தல், சொரிதல், மழைபெய்தல், நிறைதல்
420மலம்  அழுக்கு, பாவம், மனிதக்கழிவு
421மழம்  இளமை, குழந்தை
422மலை பெருங் குன்று, பொருப்பு
423மழை  மழைநீர், குளிர்ச்சி, மழை மேகம்
424மலைத்தல்  வியத்தல், தடுமாறுதல்
425மழைத்தல்  மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்
426மாலை  அந்திப்பொழுது, பூமாலை
427மாழை  மயக்கம், இளமை, அழகு
428மாளை  புளியம்பட்டை
429மால்  திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, கருமை
430மாள்  இறத்தல், சாதல்
431முலை  பால் உறுப்பு
432முழை  குகை
433முளை  முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
434முழி  விழி (விழித்தல்)
435முளி  மரக்கணு, விரல்முளி, வாட்டம்
436மூலி  மூலிகை, மரம், வேருள்ளது
437மூழி  அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம்
438மூலை  இரு கோடுகள் சந்திக்கும் இடம்
439மூளை  தளையில் இருக்கும்  உறுப்பு
440மெல்ல  மென்று தின்பது, மெல்லுவது
441மெள்ள  மெதுவாக
442மாலி  மொளலி கிரீடம்
443மாழி  மேழி, கலப்பை
444மாளி  துணிமூட்டை
445வலம்  சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
446வளம்  வளமை, அழகு, செழுமை
447வலவன்  திருமால்
448வளவன்  சோழன், வேளாளன்
449வலன்  ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
450வளன்  செழுமை, வளப்பன்
451வழப்பம்  வழக்கம், இயல்பு
452வளப்பம்  வளமை, செழிப்பு
453வலி  நோய், வலிமை, துன்பம்
454வழி  நெறி, பாதை, தடம்
455வளி  காற்று
456வலை  மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி, கொசுவலை
457வழை  சுரபுன்னை, புதுமை, இளமை
458வளை  கை வளையல், எலி வளை
459வல்  வலிமை, விரைவு, திறமை
460வள்  ஒலிக்குறிப்புச் சொல்
461வல்லம்  வாழை, ஓர் ஊர்
462வள்ளம்  மரக்கலம், படகு, அளவு, தொன்னை
463வல்லி  பூமி, பெண், பிரிதல், படர் கொடி
464வள்ளி  வள்ளியம்மை, நகை, சந்திரன்
465வலு  வலிமை, பலம், பற்று
466வழு  குற்றம், தவறு, பழிப்புரை, கேடு
467வளு  இளமை, இளைய
468வாலி  கிட்கிந்தை அரசன் (இராமாயணம்)
469வாழி  வாழ்க (வாழ்த்துதல்)
470வாளி  அன்பு, வட்ட வாள், வீரன், தண்ணீர் வாளி
471வாலை  இளம்பெண், ஒரு சக்தி
472வாழை  வாழைமரம்
473வாளை  வாளை மீன்
474வால்  விலங்குகளின் வால்
475வாழ்  வாழ்வாயாக  (வாழ்த்துதல்)
476வாள்  போர்வாள், நீண்டகத்தி
477விலா  விலா எலும்பு
478விழா  திருவிழா, கொண்டாட்டம்
479விளா  இளமை, வெண்மை, நிணம்
480விழி  கண், கருவிழி
481விளி  கூப்பிடு, அழை
482விலை  மதிப்பு, விலைக்கு விற்றல்
483விழை  விரும்பு, ஆசைப்படு
484விளை  ஒரு மீன்வகை, விளைவித்தல்
485விலக்கு  விலக்கி விடு, தவிர்
486விளக்கு  விளக்கமாகச் சொல், எண்ணெய் விளக்கு
487விலங்கு  பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம்
488விளங்கு  திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை)
489வெல்லம்  சக்கரைக்கட்டி,  பனை வெல்லம் (கருப்பட்டி)
490வெள்ளம்  மிதமிஞ்சிய நீர்பெருக்கு
491வேலம்  வேலமரம், தோட்டம்
492வேழம்  யானை, கரும்பு, மூங்கில்
493வேல்  வேலாயுதம்
494வேள்  வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை
495வேலை  பணி, கடல்
496வேளை  பொழுது, நேரம், ஒருவகைக் கீரை
497அர  பாம்பு
498அற  தெளிய, முற்றுமாக
499அரவு  பாம்பு
500அறவு  அறுதல், தொலைதல்
501அரம்  ஒரு கருவி
502அறம்  தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம்
503அரி  திருமால், அரிசி, அழகு, அரிதல்,  சிவன், சிங்கம்.
504அறி  அறிந்து கொள்ளல்.
505அரிய  கிடைத்தற்கு அரிதான, சிறப்புடைய
506அறிய  அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள
507அரன்  சிவன்
508அறன்  தர்மம், அறக்கடவுள், அறம்
509அரிவை  பெண் ( 18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்)
510அறிவை  அறிவாய்
511அருகு  புல்வகை (அருகம்புல்), அண்மை
512அறுகு  குறைதல், தேய்தல்
513அக்கரை  அந்தக் கரை
514அக்கறை  ஈடுபாடு
515அரை  பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்
516அறை  வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை
517அரைதல்  தேய்தல்
518அறைதல்  அடித்தல், அழுத்திச் சொல்லுதல்
519அப்புரம்  அந்தப் பக்கம்
520அப்புறம்  பிறகு
521அர்ப்பணம்  உரித்தாக்குதல்
522அற்பணம்  காணிக்கை 
523அரு  உருவமற்றது, அருவம்
524அறு  துண்டித்துவிடு, அறுத்துவிடு
525அருமை  சிறப்பு, அன்பு, இன்மை, அரிய பொருள்
526அறுமை  நிலையின்மை, ஆறு
527ஆரு  குடம், நண்டு
528ஆறு  ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
529ஆர  நிறைய, அனுபவிக்க
530ஆற  சூடு ஆற (குறைய)
531ஆரல்  ஒருவகை மீன்
532ஆறல்  சூடு குறைதல்
533இரத்தல்  யாசித்தல்
534இறத்தல்  இறந்துபோதல், சாதல்
535இரகு  சூரியன்
536இறகு பறவையின்  சிறகு
537இரக்கம்  கருணை, பரிவு
538இறக்கம்  சரிவு, மரணம்
539இரங்கு  கருணைகாட்டு
540இறங்கு  கீழிறங்குதல்
541இரவம்  இரவு
542இறவம்  இறால் மீன்
543இரவி  சூரியன், எருக்கு, மலை, வணிகம்
544இறவி  இறத்தல்
545இரவு  இரவு நேரம், இரத்தல், பிச்சை
546இறவு  மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
547இரை இரைச்சல், ஒலி, உணவு
548இறை  கடவுள், அணு, அரசன், தலைமை
549இரு  இரண்டு, பெரிய, உட்கார், அமருதல்
550இறு  ஒடி, கெடு, சொல்லு
551இரும்பு  கடிவாளம், கிம்புரி, ஓர் உலோகம்
552இறும்பு  வண்டு, சிறுமலை
553இருப்பு  கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்
554இறுப்பு  வடிப்பு
555இருத்தல்  அமர்ந்திருத்தல், காத்திருத்தல்
556இறுத்தல்  வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல்
557இருக்கு  மந்திரம், ரிக் மறை
558இறுக்கு  அழுத்து, இறுக்கிக்கட்டு
559இரைத்தல்  ஒலித்தல், மூச்சுவாங்குதல்
560இறைத்தல்  சிதறுதல், மிகு செலவு
561உரவு  அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம்
562உறவு  நட்பு, சுற்றம், எறும்பு
563உரவோர்  அறிஞர், முனிவர்
564உறவோர்  சுற்றத்தார், அடைந்தோர்
565உரி  தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி
566உறி  உறிவெண்ணெய், தூக்கு
567உரு  வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை
568உறு  மிகுதி
569உருக்குதல்  இளக்குதல், மெலியச் செய்தல்
570உறுக்குதல்  சினத்தல், அதட்டுதல்
571உரை  புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல்
572உறை  இடம், பண்டம், பொருள், மருந்து,  துளி, மழை, ஆடை, துன்பம், பை
573உரைப்பு  தங்குதல், தோய்தல்
574உறைப்பு  காரம், கொடுமை
575உரையல்  சொல்லல்
576உறையல்  மாறுபாடு, பிணக்கு
577உரிய  உரிமையான
578உறிய  உறிஞ்ச
579ஊரல்  ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை
580ஊறல்  தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு
581ஊரு  அச்சம், தொடை
582ஊறு  இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், துன்பம்
583எரி  தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு
584எறி  விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல்
585ஏர  ஓர் உவமஉருபு
586ஏற  மிகுதி, உயர (ஏறுதல்)
587ஏரி  நீர்நிலை, குளம்
588ஏறி  உயர்ந்த, மேலே ஏறி
589ஒரு  ஒன்று, ஒப்பற்ற, ஆடு
590ஒறு  தண்டி, அழி, இகழ்
591ஒருத்தல்  ஆண் விலங்குகளின் பொதுப்பெயர்
592ஒறுத்தல்  தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல்
593ஒருவு  நீங்கு
594ஒறுவு  வருத்தம், துன்பம்
595கரடு  மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது
596கறடு  தரமற்ற முத்து
597கரம்  கிரணம், விடம், செயல், கை, கழுதை
598கறம்  கொடுமை, வன்செய்கை
599கரவு  பொய், வஞ்சனை, மறைவு
600கறவு  கப்பம்
601கரவை  கம்மாளர் கருவி
602கறவை  பாற்பசு
603கரி  அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை
604கறி  இறைச்சி, மிளகு
605கரத்தல்  மறைத்தல்
606கறத்தல்  கவர்தல், பால் கறத்தல்
607கருத்து  எண்ணம்
608கறுத்து  கருநிறங்கொண்டு
609கரு  சினை, பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு, அடிப்படை
610கறு  சினம், பிடிவாதம், கோபம், அகங்காரம்
611கருப்பு  பஞ்சம்
612கறுப்பு  கருமைநிறம், பேய், கோபம், குற்றம், கறை
613கரை  எல்லை, தடுப்பு, ஓரம்
614கறை  அழுக்கு, குற்றம், குருதி
615கரையான்  மீனவன்
616கறையான்  செல் (ஓர் உயிரி)
617கர்ப்பம்  கருவுறுதல், உள், சினை
618கற்பம்  கஞ்சா, அற்பம், ஊழிக்காலம், தேவலோகம், திருநீறு, ஆயுள், மந்திரம்
619கர்ப்பூரம்  சூடம், பொன், மருந்து, கூடம்
620கற்பூரம்  பொன்னாங்கண்ணி
621காரி  கரிக்குருவி. காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனிகிழமை
622காறி  காறிஉமிழும் கழிவு
623காரு  வண்ணான், தேவதச்சன்
624காறு  காறுதல் (காறி உமிழ்), அளவு
625காரை  ஒரு வகை செடி, ஒரு வகை மீன், சுதைக் கலவை
626காறை  ஒரு கழுத்தணி
627கீரி  ஓர் உயிரினம்
628கீறி  பிளந்து, அரிந்து
629குரங்கு  ஒரு விலங்கு
630குறங்கு  தொடை, கொக்கி
631குரவர்  கடவுள், குரு, பெரியோர், அரசர்
632குறவர்  ஒரு ஜாதியினர்
633குரவை  கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி
634குறவை  ஒருவகை மீன்
635குரத்தி  தலைவி, குருவின் மனைவி
636குறத்தி  குறத்தி சாதிப் பெண்
637குருகு  பறவை, குட்டி, கொக்கு,  உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை
638குறுகு  அண்மைப்படுத்து
639குருகினம்  பறவை இனம்
640குறுகினம்  நெருங்கினோம்
641குரை  சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை
642குறை  குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை
643குரு  ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை
644குறு  குறுகு
645கூரல்  ஒரு மீன், பறவை இறகு
646கூறல்  சொல்லுதல், விற்றல்
647கூரை  சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில்
648கூறை  புது ஆடை, சீலை
649கூரிய  கூர்மையான
650கூறிய  பேசிய
651கூர  குளிர்ச்சி மிக
652கூற  சொல்ல, வேண்டல்
653கோரல்  கூறுதல்
654கோறல்  கொல்லல்
655கோரை  புல்வகை
656கோறை  குவளை, பொந்து
657கோரல்  சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம்
658கோறல்  குளிர் காற்று, மழை
659சிரை  சிரைத்தல், முடிநீக்கல்
660சிறை  சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை
661சீரிய ​ சினந்த,​​ சிறந்த,​​ சீராய்​
662சீறிய ​ சினந்த
663சுரா​ ​ கள்​
664சுறா​ ​ சுறா மீன்
665சூரல்​ ​ மூங்​கில்,​​ பிரம்பு​
666சூறல்​ ​ தோண்​டல்
667சுருக்கு​ ​ வலை,​​ சுருக்​கம்,​​ கட்டு,​​ பூமாலை,​​ வகை,​​ குறைவு
668சுறுக்கு​ ​ விரைவு
669செரு​ ​ போர்,​​ ஊடல்
670செறு​ ​ வயல்,​​ பாத்தி,​​ குளம்
671செரு​நர்​ ​ பகை​வர்,​​ படை​வீ​ரர்​
672செறு​நர்​ ​ பகை​வர்
673சொரி​ ​ தினவு,​​ அரிப்பு,​​ பொழி
674சொறி ​ சிரங்கு,​​ சொறி​தல்
675தரித்​தல்​ ​ அணி​தல்,​​ பொறுத்​தல்,​​ தங்​கல்,​​ தாம​தித்​தல்,​​ தாங்​கு​தல்​
676தறித்​தல் ​ வெட்​டு​தல்
677தரி​ ​ அணிதல்,  அணிந்​து​கொள்​
678தறி ​ தூண்,​​ ஆப்பு,​​ நெசவு இயந்​தி​ரம்,​​ முளைக்​கோல்
679தரு​தல் ​ கொடுத்​தல்​
680தறு​தல்​ ​ இறு​கக்​கட்​டு​தல்
681தாரு​ ​ மரம்,​​ தரு,  தேவ​தாரு,​​ பித்​தளை
682தாறு​ ​ குலை,​​ அங்​கு​சம்,​​ முள்,​​ இரும்பு,​​ முள்​கோல்
683திரம்​ ​ மலை,​​ உறுதி,​​ நிலை,​​ பூமி​
684திறம்​ ​ உறுதி,​​ நரம்​புள்ள வீணை,​ கூறு​பாடு,​​ சுற்​றம்,​​ குலம்,​​ பக்​கம்,​​ வல்​லமை,​​  மேன்மை
685திரை​ ​ அலை,​​ கடல்,​​ திரைச்​சீலை
686திறை​ ​ கப்​பம்
687துரவு​ ​ கிணறு​
688துறவு​ ​ துறத்​தல்,​​ துற​வ​றம்
689துரை​ ​ பெரி​யோன்,​​ தலை​வன்
690துறை​ ​ நீர்த்​துறை,​​ வழி,​​ இடம்,​​ நூல்,​​ கடற்​கரை,​​  பாவி​னம்
691துரு​ ​ களிம்பு
692துறு​ ​ கூட்​டம்,​​ நெருக்​கம்
693தூரல்​ ​ தூரு​தல்,​​ வருத்​தம்
694தூறல்​ ​ மழைத்​துளி,​​ பழி சொல்​லி தூற்றுதல்
695தூரன்​ ​ குலத்​தின் பெயர்
696தூறன்​ ​ மூர்க்​கன்
697துரு​ ​ வீதி
698துதறு​ ​ அழி
699தேரார்​ ​ கல்​லா​த​வர்,​​ கீழ்​மக்​கள்,​​ பகை​வர்​
700தேறார்​ ​ அறி​வி​லார்,​​ பகை​வர்
701தேரி  மணல் திட்டை, மணல் குன்று
702தேறி  தேர்ச்சி பெற்று, தெளிந்து
703நரை  நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை
704நறை  தேன், சாதிக்காய், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக்கொடி, குற்றம்
705நாரி  பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன்
706நாறி  கற்றாழை
707நிருத்தம்  கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை
708நிறுத்தம்  நிறுத்தும் இடம்
709நிரை  பசு, ஒழுங்கு, வரிசை
710நிறை  கற்பு, அளவு, அழிவின்மை, நீதி, வரையறை, திண்மை, நிரப்பு
711நூரல்  அவிதல், பதங்கெடுதல்
712நூறல்  அவித்தல்
713நேரி  அமுக்கு, நசுக்கு, அழுத்து
714நேறி  வழி, கோயில், கற்பு
715பரட்டை  பரட்டைத்தலை
716பறட்டை  செழிப்பற்றது
717பரதி  கூத்தாடுபவன்
718பறதி  அவசரம், பறத்தல்
719பரத்தல்  அலமறுதல், மிகுதல்
720பறத்தல்  பறந்துசெல்லல்
721பரம்பு  வயலை சமப்படுத்தும் பலகை
722பறம்பு  பாரியின் மலை
723பரல்  விதை, பருக்கைக்கல்
724பறல்  பறவை
725பரவை  கடல், ஆடல், பரப்பு
726பறவை  பறப்பவை, ஒரு நோய்
727பரி குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி
728பறி  பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு, ஓலைப்பாய்
729பரித்தல்  காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல்,
730பறித்தல்  பிடுங்குதல்
731பரிவு  அன்பு, துன்பம், இரக்கம்
732பறிவு  கழிவு, அதிர்தல்
733பருகு  குடி, அருந்து
734பறுகு  பறட்டை, அன்பு, பக்குவம்
735பரை  சிவசக்தி
736பறை  இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல்
737பாரை  கடப்பாரை
738பாறை  கற்பாறை
739பிரை  உறைமோர், பயன்
740பிறை  பிறைச்சந்திரன்
741பீரு  புருவம், அச்சமுள்ளோன்
742பீறு  கிழிவு
743புரம்  மாடம், கோயில்,  ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம்
744புறம்  இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி, பின்புறம், முதுகு
745புரவு  கொடை, நிலம், செழுமை, காத்தல், அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம்
746புறவு  காடு, புறா
747பெருக்கல்  நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல், மிகுவித்தல்
748பெறுக்கல்  அரிசி, மிகுத்தல்
749பொரி  நெற்பொரி, பொரிதல்
750பொறி  தீப்பொறி, அறிவு, எழுந்து, வரிவண்டு
751பொரித்தல்  வறுத்தல், குஞ்சு பொரித்தல்
752பொறித்தல்  எழுதுதல், தீட்டுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல்
753பொருப்பு  மலை, பக்கமலை
754பொறுப்பு  பாரம், பொறுமை
755பொரு  போர்
756பொறு  பொறுத்திரு
757மரத்தல்  விறைத்தல்
758மறத்தல்  மறதி, நினைவின்மை
759மரம்  தாவர வகை, மூலிகை, மரக்கலம், பறைவகை
760மறம்  வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம்
761மரி  விலங்குகளின் குட்டி
762மறி  தடை செய்
763மரித்தல்  இறத்தல், சாதல்
764மறித்தல்  தடுத்தல், திரும்புதல், அழித்தல்.
765மரை  மான்
766மறை  வேதம் 
767மரு  மலை, பாலைநிலம், மணவிருந்து, நீரில்லா இடம், மருக்கொழுந்து
768மறு  குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்
769மருப்பு  கொம்பு, யானைத் தந்தம், யாழ்த்தண்டு
770மறுப்பு  எதிர்ப்பு
771மருகு  வாசனை தாவரம்
772மறுகு  சிறியதெரு
773மாரன்  மன்மதன், காமன்
774மாறன்  பாண்டியன், சடகோபாழ்வார்
775முரி  பாலைநிலம், நொய், சிதைவு
776முறி  ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு
777முருக்குதல்  அழித்தல், உருக்குதல்
778முறுக்குதல்  சுழற்றுதல், திரித்தல்
779வரம்  இறைவன் கொடுப்பது, வேண்டும் பொருள், தெய்வ ஈகை, மேன்மை, விருப்பம்
780வறம்  வற்றுதல், வறட்சி, பஞ்சம், நீரின்மை, வறுமை, வெம்மை
781வரவு  வருமானம், வழி
782வறவு  கஞ்சி
783வரப்பு  எல்லை, வரம்பு
784வறப்பு  வறட்சி, வறுமை, வற்றுதல்
785விரகு  விவேகம், உபாயம், உற்சாகம், புத்தி, கபடம்
786விறகு  எரிகட்டை
787விரலி  மஞ்சள்
788விறலி  மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடும் பெண், பருவப்பெண்
789விரல் கை விரல்
790விறல் பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி.
791விராய்  விறகு
792விறாய்  செருக்கு, இறுமாப்பு
793வெரு  அச்சம்
794வெறு  வெறுத்துவிடு
795வெரல்  மூங்கில்
796வெறல்  வெல்லுதல், வெற்றி கொள்ளல்
797விரை  விரைந்துசெல்
798விறை  மரத்துப்போதல், விறைத்துப்போதல்

About Us

Lorem ipsum dol consectetur adipiscing neque any adipiscing the ni consectetur the a any adipiscing.

Email Us: infouemail@gmail.com

Contact: +5-784-8894-678

Thamizhmeetchi  @2024. All Rights Reserved.