Friday, 27 February 2026

Contact Info

  • ADDRESS: Street, City, Country

  • PHONE: +(123) 456 789

  • E-MAIL: your-email@mail.com

Blog

Blogs

உ. வே. சாமிநாத ஐயர்

உ. வே. சாமிநாத ஐயர் உ. வே. சாமிநாதனார் (பிப்ரவரி 19,1855 – ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன் என்பதைச் சுருக்கமாக உ.வே.சா. என அழைக்கப்பட்டார். தமிழ் நூல் பதிப்பில் முன்னோடிகளான ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரன் பிள்ளை அவர்களைத் தொடர்ந்து தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் ‘தமிழ்த் தாத்தா’ எனத் தமிழர்களால் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் […]

Blogs

பேராசிரியர் சி. இலக்குவனார்

பேராசிரியர் சி. இலக்குவனார் பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909 – செப்டம்பர் 3, 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்களை இயற்றியுள்ளார். 1909ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் நாகப்பட்டிணம் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மேடு என்னும் சிற்றூரில், சிங்காரவேலர் இரத்தினத்தாச்சி இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார். வாய்மேட்டில் […]

Blogs

இரட்டைமலை சீனிவாசனார்

இரட்டைமலை சீனிவாசனார் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (சூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி தமிழ்க்குடி மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.  பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன்  என்ற மாத இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர். சீனிவாசன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் இரட்டைமலை என்பவருக்குப் […]

Blogs

அன்ரன் பாலசிங்கம்

ஆன்ரன் பாலசிங்கம்  ஆன்ரன் பாலசிங்கம்  (அன்டன் பாலசிங்கம்) மார்ச் 4, 1938 – டிசம்பர் 14, 2006) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமை கொண்ட ஈழத்தமிழர் ஆவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் தொடக்கம் முதல் செனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் அமைப்புக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை வழங்கியுள்ளன. 1970 களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை […]

Blogs

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 – அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் எளிய வேளாண் குடும்பத்தில் அருணாச்சலனார் – விசாலாட்சி இணையருக்கு இளைய மகனாக 13.04.1930இல் பிறந்தார். இவர் தந்தையும் கவிபாடும் திறன் பெற்றவர். […]

Blogs

ஈகைச் சுடர் திலீபன்

தியாக தீபம்  திலீபன் திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தொடக்ககால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கையில் யாழ்ப்பாணம் ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது. மகாத்மா காந்தியின் அகிம்சை தத்துவத்தைத் தனது அடிப்படை அரசியல் கொள்கையாக பறை சாற்றும் இந்திய அரசிடம், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு நீதி கேட்டு, ஆயுதப் […]

Blogs

அயோத்திதாச பண்டிதர்

  அயோத்திதாசப் பண்டிதர் ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்றெடுப்பதற்காக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெடுத்தார் அறிவு ஆசான் புலவர் அயோத்திதாசர். சாதிய வேறுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் மிகத் தீவிரமாக இருந்த காலத்தில், பொதுப் பாதைகளைப் பயன்படுத்துவதற்கும், கிணறுகள் குளங்கள் போன்ற பொது நீர்நிலைகளில், தண்ணீர் குடிக்கவும்கூட உரிமையற்ற நிலையும், தீண்டத்தகாதவர்கள் என்றும் சமூகத்தால் ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டும், நிலமற்ற ஏழைகளாக, அழுக்கு மனிதர்களாக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த அம்மக்களின்  கல்வி கற்பதற்கான […]

Blogs

மறைமலை அடிகள்

மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர்,  தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்குக் கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குல சமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் […]

Blogs

மறைமலையடிகள் புகழ்வணக்கப்பா!

தனித்தமிழின் பெருநெருப்பு ஆறு – நம் மறைமலையாம் அடிகள்பெயர் கூறு – உன் மனத்தினையே இரும்பாக்கி ஏறு – தமிழ் மீட்சிக்கே புலியாக மாறு ! குணக்குன்றாய் மறைமலையே நின்றார் – தமிழ் தனித்தியங்கும் சிறப்பினையே கண்டார் ! – பலர் மணிப்பவழ நடையென்றே சொல்லி – எழுதினார் சமற்கிருதம் கலந்தன்றே அள்ளி ! வேதாசலம் என்றபெயர் மாற்றி – நல்ல மறைமலையாம் எனும் பெயரைச் சூட்டி – கருத்து மோதலிலே வென்றிட்டார் தேற்றி – தனித் […]

About Us

Lorem ipsum dol consectetur adipiscing neque any adipiscing the ni consectetur the a any adipiscing.

Email Us: infouemail@gmail.com

Contact: +5-784-8894-678

Thamizhmeetchi  @2024. All Rights Reserved.