Sunday, 1 March 2026

Contact Info

  • ADDRESS: Street, City, Country

  • PHONE: +(123) 456 789

  • E-MAIL: your-email@mail.com

  • Home  
  • அன்ரன் பாலசிங்கம்
- Blogs

அன்ரன் பாலசிங்கம்

ஆன்ரன் பாலசிங்கம்  ஆன்ரன் பாலசிங்கம்  (அன்டன் பாலசிங்கம்) மார்ச் 4, 1938 – டிசம்பர் 14, 2006) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமை கொண்ட ஈழத்தமிழர் ஆவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் தொடக்கம் முதல் செனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் அமைப்புக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை வழங்கியுள்ளன. 1970 களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை […]

ஆன்ரன் பாலசிங்கம் 

ஆன்ரன் பாலசிங்கம்  (அன்டன் பாலசிங்கம்) மார்ச் 41938 – டிசம்பர் 142006விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமை கொண்ட ஈழத்தமிழர் ஆவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் தொடக்கம் முதல் செனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் அமைப்புக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை வழங்கியுள்ளன.

1970 களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த புலிகள் இயக்கத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பாலசிங்கத்துடன் தொடர்பு கொண்டதன் மூலம் பாலசிங்கத்துக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புகள் ஏற்பட்டது. பின்னர் பாலசிங்கம்  இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தும் போது பிரபாகரனுடனான தொடர்பு மேலும் வளர்ந்தது. 1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பாலசிங்கம் தம்பதியினர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர்.

1985 திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய பாலசிங்கத்தின் நிலை காலப்போக்கில் புலிகள் இயக்கத்தில் உயர்ந்து புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் உயர்ந்த அதேவேளை பிரபாகரனின் நெருங்கிய நண்பராகவும் மாறினார்.

ஏப்ரல் 2002இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு மொழி பெயர்ப்பு உதவிகளையும் செய்தார்.

ஆன்ரன்பாலசிங்கம் முதலில் மார்க்சிய வாதியாக இருந்தவர். பின்னர் அதில் இருந்து தன்னை விலக்கி, ஈழத் தமிழ்த் தேசியத்தை வரையறை செய்பவர்களில் ஒருவரானார். தமிழீழ விடுதலைப் புலிகளில் கற்றறிவு, அனுபவ அறிவு, ஆங்கில மொழி புலமை, மிதவாதத் தன்மை  வெளிஉலக பார்வைத் தொடர்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மிக முக்கிய தலைவராக விளங்கினார்.

இலங்கையின் நாளேடு ஒன்றின் கருத்துப்படி, விடுதலைப் புலிகளை பேச்சுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி வந்ததோடு 2002இல் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பாலசிங்கம் உழைப்பு முக்கியமானதாகும். புலிகள் இயக்கத்தில் உள்ள தீவிரவாத கருத்துள்ள தலைவர்களிடமிருந்து புலிகளை மீட்டு அரசியல் தீர்வுகளுக்கு இட்டுச் செல்ல முனைந்த முக்கிய தலைவராவார்.

           புலிகள் மேலாதிக்கத்துக்கு வந்ததற்கு முக்கிய காரணம் இந்தியாவால் வழங்கப்பட்ட போர்கருவிகளுகும் மேலாக அனைத்துலகச் சந்தையில் கொள்முதல் செய்து அதனை வெற்றிகரமாக தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தமைதான். இதற்குரிய பணத்தை புலிகள் பெறுவதற்கும் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம் ஜி ஆர் அவர்களின் செல்லப்பிள்ளை இயக்கமாக புலிகள் வருவதற்கும் காரணமாக இருந்தவர் பாலசிங்கம்தான்.

2000ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய உறுப்புகள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்த கலாநிதி ஆன்ரன்பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 அன்று தனது 68 வது வயதில் இலண்டனில் காலமானார்.

மறைந்த ஆன்ரன் பாலசிங்கத்துக்கு “தேசத்தின் குரல்” எனும் கௌரவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவித்தார்.

அன்ரன் பாலசிங்கம்

தமிழ் மீட்சியே!                     

தமிழர் எழுச்சி !

தமிழ் மீட்சியே – நாம் தமிழர் கட்சி

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவு நாள் புகழ் வணக்கப் பா!

நினைவு நாள் : நளி  ககூ, உருகஉ  (திசம்பர் 14, 2021)

நெஞ்சமதில் நிறைந்திட்ட தங்கம் – தமிழ்

‘நெறியர்;அன் ரன்பால சிங்கம் – எழில்

கொஞ்சுகிற ஈழமண்ணில் விஞ்சுபுகழ் தலைவருக்குத்

துணையவர் – மதி ஒளியவர் !

வஞ்சிக்கும் சிங்களனை எதிர்த்தவர் – புலிகள்

வரலாற்றில் அரசியலை விதைத்தவர்

தஞ்சமென்றே வந்தவரைத் தன்னார்வ அன்னையாக

அணைத்தவர் – மறக் குணத்தவர் !

சருக்கிடாமல் உழைத்திருக்க முனைந்தவர் – தேசியத்

தலைவருடன் உறுதுணையாய் இணைந்தவர்!  

கருத்தினையே உலகரங்கில் அமைவுறவே எடுத்துரைத்து

நின்றவர் – அதில் வென்றவர் !

தன்னுரிமை மண்ணுரிமை நட்டவர் – புலித்

தலைவர்தம் உள்ளமதைத் தொட்டவர்

என்னவரும் வாழ்த்தளிக்க அரசியலில் வழிகாட்டிப்

போனவர் – புலி யானவர் !

இங்கிலாந்தில் குடியுரிமை அடைந்தவர் – தமிழ்

ஈழத்தின் தாய்நிலத்தில் பிறந்தவர் !

மங்காத மாண்புடைத்தப் புலிகளுக்கே குருவராக

இருந்தவர் – சீர் மிகுந்தவர் !

தேசத்தின் குரலென்றே ஏற்றினார் – அன்ரன்

சிறப்பெல்லாம் நம்தலைவர் நாட்டினார்

மாசற்ற பாலண்ணா போற்றுவோம் – பா  

மலர்சூட்டிப் புகழ்வணக்கம் சாற்றுவோம் !

தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

About Us

Lorem ipsum dol consectetur adipiscing neque any adipiscing the ni consectetur the a any adipiscing.

Email Us: infouemail@gmail.com

Contact: +5-784-8894-678

Thamizhmeetchi  @2024. All Rights Reserved.