Friday, 27 February 2026

Contact Info

  • ADDRESS: Street, City, Country

  • PHONE: +(123) 456 789

  • E-MAIL: your-email@mail.com

  • Home  
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- Blogs

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 – அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் எளிய வேளாண் குடும்பத்தில் அருணாச்சலனார் – விசாலாட்சி இணையருக்கு இளைய மகனாக 13.04.1930இல் பிறந்தார். இவர் தந்தையும் கவிபாடும் திறன் பெற்றவர். […]

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 – அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் எளிய வேளாண் குடும்பத்தில் அருணாச்சலனார் – விசாலாட்சி இணையருக்கு இளைய மகனாக 13.04.1930இல் பிறந்தார். இவர் தந்தையும் கவிபாடும் திறன் பெற்றவர். ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் உள்ளனர். பள்ளிப் படிப்பை முடித்த கல்யாண சுந்தரம் திராவிட இயக்கத்திலும், பொதுவுடைமைக் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஊர்ப்புற மக்களின் பண்ணைத் தழுவி பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைந்தார். பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டி, குறைகளையும் நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். பாட்டாளி மக்களின் ஆசை, கோபம், ஆற்றல்களைத் திரையுலகில் பாடல்களாகக் கொடுத்தார்.

இளவயதில் வேளாண் சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சியிலும் ஈடுபட்டு தான் பின்பற்றி வந்த கட்சியின் கொள்கைகளை வளர்ப்பதில் ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், வேளாண் இயக்கத்தில் பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீர ஈகைகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து வேளாண் இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார்.

வேளாண் பணி, மாடுமேய்ப்பவர், மாட்டு வணிகர், மாம்பழ வணிகர், இட்லி வணிகர், முறுக்கு வணிகர், தேங்காய் வணிகர், கீற்று வணிகர், மீன் நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, எந்திர ஓட்டுநர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல் வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் என பலத் துறைகளில் தமது வாழ்வில் ஈடுபட்டவர். இவரது நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா ‘ வில் இணைந்தார். இந்த சபாவில்தான் நடிகர் திலகம் சிவாசி கணேசன், எம்.என். நம்பியார், எஸ்.வி. சுப்பையா, ஓ.ஏ.கே. தேவர் போன்றோர் நடிகர்களாக இருந்தனர். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் பின்னர் திரைப்படமாக வெளிவர, நாடக நடிகர்கள் திரைத்துறையில் நுழைய தொடங்கினர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டு புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்து பாடல் எழுதும் கலையைக் கற்று புரட்சிக் கவிஞராக உருவானார்.

சென்னையில் வறுமையோடு வாழ்ந்த பட்டுக்கோட்டையாருக்கு பொதுவுடைமை இயக்க தோழர் பா.சீவானந்தம் நெருங்கிய நண்பர் ஆனார். அவர் மூலமாக சனசக்தியில் பாடல்கள் எழுதினார். சீவாவின் உதவியால் பொதுவுடைமை இயக்க நாடகமான ‘கண்ணின் மணிகள்’ நாடகத்திற்கும் பாடல்கள் எழுதினார்.

இவர் இயற்றிய கருத்துச் செறிவு மிக்கப் பல பாடல்களை சனசக்தி இதழ் வெளியிட்டு வந்தது. 1954ஆம் ஆண்டு இவரது முதல் பாடல் திரைப்படத்திற்காக எழுதப்பட்டது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்கள் அனைவராலும் போற்றிப் புகழப்பட்ட கவிஞர் ஆனார். அன்று தொடங்கிய வெற்றிப் பயணம் இறுதி நாள் வரை தொடர்ந்தது.

ம.கோ.இரா (எம்.ஜி.ஆர்) – சிவாசி ஆகியோரது பல திரைப்படங்கள் இவர் எழுதிய பாடல்களோடு வெளிவர தொடங்கின. எம்.ஜி.ஆர். படங்களில் இவரது தத்துவப் பாடல்கள் இடம்பெற்று அவரை புகழின்  உச்சிக்கே கொண்டு சென்றன. எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்’, ‘அரசிளங்குமரி’, ‘கலை அரசி’, ‘சக்கரவர்த்தி திருமகள்’, ‘மகாதேவி’, ‘விக்கிரமாதித்தன்’, ‘திருடாதே’ போன்ற படங்களுக்கும், சிவாசி கணேசன் நடித்த ‘மக்களை பெற்ற மகராசி’, ‘அம்பிகாபதி’, ‘இரும்புத்திரை’, ‘உத்தமபுத்திரன்’, ‘பதிபக்தி’, ‘தங்கப்பதுமை’ ‘பாகப் பிரிவினை’, ‘புனர் சென்மம்’ போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். இயக்குனர் சிறிதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாணபரிசு’ படத்துக்கு எழுதிய அனைத்து பாடல்களுமே புகழ்பெற்றவை.

189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார், அவற்றுள் எழுச்சிமிக்க புரட்சிப் பாடல்கள் பல அடங்கும்.

தூங்காதே தம்பி தூங்காதே, சின்னப்பயலே சின்னப்பயலே, திருடாதே பாப்பா திருடாதே, குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா, காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்,

“இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்கிற வேலையும் இருக்காது, உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கிற நோக்கம் வளராது” போன்ற தத்துவ புரட்சிப்பாடல்கள் பலவற்றை தான் வாழ்ந்த மிகக்குறைந்த வயதிலேயே எழுதினார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு 1957இல் திருமணம் முடித்து அடுத்த ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது புகழின் உச்சியில் இருந்தபோது 1959ஆம் ஆண்டின் நடுவில் மூக்கில் ஏற்பட்ட கட்டி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை நடந்து வீடு திரும்பினார். மறுபடியும் மூக்கில் தொல்லை ஏற்படவே அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எவரும் எதிர்பாராத வகையில் அவர் 1959 அக்டோபர் 8 அன்று மரணம் அடைந்தார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அரசால் மணிமண்டபம் நிறுவப்பட்டது. இதில் அவரின் மார்பளவு சிலையும் அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கலும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சங்கம் அவருக்கு ‘மக்கள் கவிஞர்’ பட்டம் வழங்கியது, தமிழ்நாடு அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. 1993ஆம் ஆண்டு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் குறித்த ஆய்வு இருக்கை ஒன்று இயங்கி வருகிறது.

மக்கள் பாவலன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

நினைவு நாள் புகழ்வணக்கப்பா!      நினைவு நாள் அக். 08, 2021

 

பட்டுக் கோட்டை

கல்யாண சுந்தரம்

யாரடா – திரையில்

பாட்டு எழுதி

உயர்ந்த புலவன்

கூறடா !

 

எட்டி நில்லு

தீட்டு என்பார்

யாரடா – அவரை

ஏறி மிதிக்கத்

துணிவைத் தந்தான்

பாரடா !

 

பட்டுப் பட்டுத்

துளிர்க்கும் உழவர்

வீட்டா – ஊர்

பட்டுக் கோட்டைச்

செங்கப் படுத்தான்

காடடா !

 

முட்டி மோதும்

வகுப்புப் பகைமை

நூறடா – அதற்கு

முடிவு கட்ட

நாம் தமிழராய்

மாறடா !

 

கட்டுக் கட்டாய்ப்

பணத்தைச் சுருட்டுவார்

பாரடா – அந்தக்

கயவர் கணக்கைத்

தீர்க்கப் புலியாய்

மாறடா !

 

மட்டை போன்றார்

பலரை எண்ணிப்

பாரடா – அவர்

திருட ரையே

தேர்ந்து எடுப்பார்

வீணடா !

 

திட்ட மிட்டுத்

திருடும் கூட்டம்

பாரடா – அவர்

திருந்தப் பாடல்

தந்தான் தோழன்

கூறடா !

 

பட்டை தீட்டி

அவரைக் கூர்மை

ஆக்கடா – தேர்தல்

களத்தில் நல்லார்

வெல்லக் கருத்தால்

ஊக்கடா !

 

 

இட்டுக் கட்டும்

அரசியல் புரட்டர்

தேடடா – அவரை

இரண்டாய்க் கிழித்துப்

போட ஒன்றாய்ச்

சேரடா !

 

அட்டை யாக

உறிஞ்சும் முதலை

ஏனடா – அதை

அடித்து நொறுக்கும்

இவனின் பாடல்

தேனடா !

 

சிட்டாய்ப் பறக்கும்

சின்ன பயலைப்

பாரடா – அவர்க்குச்

செய்தி சொன்ன

இவனின் புகழைப்

பாடடா !

 

மெட்டுக் கட்டிப்

பாட்டுப் பாடிய

தோழனை – நாம்

தொட்டு வணங்கி

மதிப்போம் புரட்சி

வேலனை !

தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

About Us

Lorem ipsum dol consectetur adipiscing neque any adipiscing the ni consectetur the a any adipiscing.

Email Us: infouemail@gmail.com

Contact: +5-784-8894-678

Thamizhmeetchi  @2024. All Rights Reserved.