| வ.எண் | அயற்சொற்கள் | அழகிய தமிழ் சொற்கள் |
| 1 | அக்கு பாத்தியம் | உரிமை |
| 2 | அசல் | நிலம், அண்டை, மூலம் |
| 3 | அடமானம் | அடைமானம், பிணை, ஈடு |
| 4 | அனுபவத்தில் | துய்ப்பில், பயன்பாட்டில் |
| 5 | அனுபவித்து | துய்த்து |
| 6 | ஆர்ஜிதம் | கையகப்படுத்துதல் |
| 7 | உயில் | விருப்பாவணம், சாவுமுறி, இறுதிமுறி |
| 8 | உயில் தாவா | விருப்பாவண சிக்கல் |
| 9 | கார்பெட் ஏரியா | பயன்பாட்டுப் பரப்பு |
| 10 | கிரிமினல் | குற்றவியல் |
| 11 | கிரைய உடன்படிக்கை ஆவணம் | சொத்துக்கான ஒப்பந்தம் அல்லது அச்சார ஆவணம் |
| 12 | கிரைய ஒப்பந்தம் | விலையொப்பம் |
| 13 | கிரையம் | விலை, மதிப்பு |
| 14 | கிரையம் செய்பவர் | சொத்தை விற்பவர் |
| 15 | கிரையம் வாங்குபவர் | சொத்தை வாங்குபவர் |
| 16 | குத்தகை (தமிழ்) | துய்ப்பு உரிமை, துய்ப்பு உரிமை ஆவணம் |
| 17 | குமாரர் | மகன் |
| 18 | கொலட்டிரல் | கடன் ஈட்டு ஆவணம், துணை ஈடு, பிணை |
| 19 | கோர்ட்டு அட்டாச்மெண்ட்டு | நீதிமன்ற இணைப்பு |
| 20 | சகல உரிமைகளுடன் | அனைத்து உரிமைகளுடன், முழு உரிமைகளுடன் |
| 21 | சகல சர்வ சுதந்திர பாத்தியம் | அனைத்து உரிமைகளும் |
| 22 | சரத்துப்படிக்கு | பிரிவின்படிக்கு |
| 23 | சர்க்கார் | அரசு |
| 24 | சர்வ சகல | அனைத்து |
| 25 | சாட்சிகள் | அறிவர், அறிவோர், அறிகரியாளர், சான்றாளர் |
| 26 | சிவில் | குடிசார் |
| 27 | சுத்த விக்கிரையப் பத்திரம் | விலை ஆவணம் |
| 28 | சுவாதீனத்தில் | கைக்கொள்ளுதல் |
| 29 | சுவாதீனம் | கைக்கொளல் |
| 30 | சுவாதீனம் | உரிமை |
| 31 | செக்குபந்தி / நான்கெல்லை | நாற்பாற்கெல்லை |
| 32 | செக்யூரிட்டி | ஈடு, பாதுகாப்பு |
| 33 | சொத்து விவரத்தில் | சொத்து விளக்கத்தில், சொத்துக் குறிப்பில் |
| 34 | தான செட்டில்மென்ட் | தானமாக கொடுக்கும் சொத்து ஆவணம் |
| 35 | நகல்கள் | படிகள் |
| 36 | நிர்ணயம் | வரையறை, உறுதிசெய்தல் |
| 37 | நில ஆர்ஜிதம் | சொத்து கையகப்படுத்தல் / நிலப் பறிப்பு |
| 38 | நிலுவை | வர வேண்டிய தொகை |
| 39 | நெம்பர் | எண் |
| 40 | பத்திரம் | ஆவணம் |
| 41 | பாக்கி | நிலுவை |
| 42 | பாங்க் மூலம் | வங்கி பரிமாற்றம் மூலம் |
| 43 | பாத்தியங்களுடனும் | உரிமைகளுடன், பங்குடன், தொடர்புடன் |
| 44 | பாத்தியதை | உறவு உரிமை |
| 45 | பாத்தியம் | உரிமை, பங்கு, தொடர்பு |
| 46 | பார்ட்டிகளும் | தரப்பினரும் |
| 47 | பிரதிநிதிகள் | நிகரர், நிகராளி, மாற்று ஆள் |
| 48 | பிரதிப்பலன் | கைமாறு |
| 49 | பில்டப் ஏரியா | கட்டுமானப் பரப்பளவு |
| 50 | புத்திர பௌத்திர பாரம்பரியமாய் | வழிவழித்தொடர்பாய், மரபுவழியாய் |
| 51 | பூரண சம்மதம் | முழு விருப்பம் |
| 52 | முன்கிரையம் | உறுதிப்பணம் |
| 53 | மைனர் வழக்கு | முதிரா வயதுடையோர் வழக்கு |
| 54 | யோக்கியமாய் | உண்மையாய் |
| 55 | ரெவன்யூ | வருவாய் |
| 56 | ரொக்கமாய் | பணமாக, தொகையாக |
| 57 | வகையறாக்கள் (தமிழ்) | சொத்தின் உரிமை சார்ந்தவர்கள் |
| 58 | வகையாறா (தமிழ்) | ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர் |
| 59 | வயது | அகவை |
| 60 | வாரிசு தாவா | பிள்ளை, குழந்தை சார்ந்த வழக்கு |
| 61 | விக்கிரையம் | விலை, மதிப்பு |
| 62 | வித்தொத்தி தானாதி வினுமிய, தானாதி விலிய விக்கிரயங்களுக்கு யோக்கிய | ஒரு சொத்தை தானமாகப் பெற்றவர் முழு உரிமையாளராகவும் அச்சொத்தை விற்கும் உரிமைப் பெற்றவராகவும் ஆவார். விற்காமலோ உயில் (விருப்ப ஆவணம்)போன்ற ஆவணம் செய்யாமல் இறக்க நேரிட்டால், அச்சொத்து வாரிசு உரிமை சட்டப்படி வாரிசுகளுக்குச் சேரும். |
| 63 | விலாசம் | முகவரி |
| 64 | வில்லங்கம் | கலன் / சிக்கல் |
| 65 | விஸ்தீரனம் | பரப்பளவு |
| 66 | ஜீவனாம்சம் | கொற்றிலக்கை (கொற்று-உணவு, இலக்கை-உடை) |
| 67 | ஸ்டாம்பு | முத்திரை |
| 68 | ஷெடியூலில் | அட்டவணையில் |