| வ.எண் | மயங்கொலிச் சொற்கள் | பொருள் |
| 1 | அணல் | தாடி, கழுத்து |
| 2 | அனல் | நெருப்பு, தீ, சூடு |
| 3 | அணி | அழகு |
| 4 | அனி | நெற்பொறி |
| 5 | அணு | திண்மம் |
| 6 | அனு | தாடை, தனிமை |
| 7 | அணுக்கம் | அண்டை, அண்மை. |
| 8 | அனுக்கம் | வருத்தம், அச்சம் |
| 9 | அணை | அணைத்தல் |
| 10 | அனை | அன்னை, மீன் |
| 11 | அணைய | சேர, அடைய |
| 12 | அனைய | அத்தகைய |
| 13 | அண்மை | அருகில் |
| 14 | அன்மை | தீமை, அல்ல |
| 15 | அங்கண் | அவ்விடம் |
| 16 | அங்கன் | மகன் |
| 17 | அண்ணம் | மேல் உள்வாய் |
| 18 | அன்னம் | சோறு, அன்னப்பறவை |
| 19 | அண்ணன் | மூத்த உடன்பிறந்தோன் |
| 20 | அன்னன் | அத்தகையவன் |
| 21 | அவண் | அவ்வாறு, அங்கே |
| 22 | அவன் | ஆண்மகன் (தூரச் சுட்டு) |
| 23 | ஆணகம் | சுரை |
| 24 | ஆனகம் | துந்துபி |
| 25 | ஆணம் | பற்றுக்கோடு |
| 26 | ஆனம் | தெப்பம், கள் |
| 27 | ஆணி | எழுத்தாணி, இரும்பு ஆணி |
| 28 | ஆனி | தமிழ் மாதம் |
| 29 | ஆணேறு | ஆண்மகன் |
| 30 | ஆனேறு | காளை, எருது |
| 31 | ஆண் | ஆடவன் |
| 32 | ஆன் | பசு |
| 33 | ஆணை | கட்டளை, ஆட்சி |
| 34 | ஆனை | யானை |
| 35 | இணை | துணை, இரட்டை |
| 36 | இனை | இன்ன, வருத்தம் |
| 37 | இணைத்து | சேர்த்து |
| 38 | இனைத்து | இத்தன்மையது |
| 39 | இவண் | இவ்வாறு |
| 40 | இவன் | ஆடவன், (அண்மைச் சுட்டு) |
| 41 | ஈணவள் | ஈன்றவள் |
| 42 | ஈனவள் | இழிமகள் |
| 43 | உண் | உண்ணக்கூறுதல் |
| 44 | உன் | உன்னுடைய |
| 45 | உண்ணல் | உண்ணுதல் |
| 46 | உன்னல் | நினைத்தல் |
| 47 | உண்ணி | அதிகமாக உண்பவன், ஒருவகைப் பூச்சி |
| 48 | உன்னி | நினைத்து, குதிரை |
| 49 | ஊண் | உணவு |
| 50 | ஊன் | இறைச்சி |
| 51 | எண்ண | நினைக்க |
| 52 | என்ன | போல, வினாச்சொல் |
| 53 | எண்ணல் | எண்ணுதல் |
| 54 | என்னல் | என்று சொல்லுதல் |
| 55 | எண்கு | கரடி |
| 56 | என்கு | என்று சொல்லுதல் |
| 57 | ஏண் | வலிமை |
| 58 | ஏன் | வலிமை, ஒரு வினைச்சொல் |
| 59 | ஏணை | துணித் தொட்டில் |
| 60 | ஏனை | மற்ற |
| 61 | ஐவணம் | ஐந்து வண்ணம் |
| 62 | ஐவனம் | மலை நெல் |
| 63 | ஓணம் | ஒரு கேரளப் பண்டிகை |
| 64 | ஓனம் | எழுத்தின் சாரியை |
| 65 | கணகம் | ஒரு படைப்பிரிவு |
| 66 | கனகம் | பொன் |
| 67 | கணப்பு | குளிர்காயும் தீ |
| 68 | கனப்பு | பாரம், அழுத்தம் |
| 69 | கணி | கணித்தல் |
| 70 | கனி | பழம் |
| 71 | கணம் | பொழுது, கூட்டம் |
| 72 | கனம் | எடை |
| 73 | கண்ணன் | மாயோன் |
| 74 | கன்னன் | கர்ணன் |
| 75 | கண்ணி | மாலை, கயிறு, தாம்பு |
| 76 | கன்னி | குமரிப்பெண், இராசி |
| 77 | கணை | அம்பு |
| 78 | கனை | ஒலி, கனைத்தல் |
| 79 | கண் | பார்வை உறுப்பு |
| 80 | கன் | கல், செம்பு, உறுதி |
| 81 | கண்று | அம்பு |
| 82 | கன்று | இளஞ்செடி, மாட்டின் குட்டி |
| 83 | கண்ணல் | கருதல் |
| 84 | கன்னல் | கரும்பு, கற்கண்டு |
| 85 | காண் | பார்த்தல் |
| 86 | கான் | காடு |
| 87 | காணம் | பொன், கொள்ளு |
| 88 | கானம் | இசை, காடு, தேர் |
| 89 | காணல் | பார்த்தல் |
| 90 | கானல் | பாலை, வெற்று நீர் |
| 91 | கிணி | கைத்தாளம் |
| 92 | கினி | பீடை |
| 93 | கிண்ணம் | வட்டில், கிண்ணி |
| 94 | கின்னம் | கிளை, துன்பம் |
| 95 | குணி | வில், ஊமை |
| 96 | குனி | குனிதல், வளைதல் |
| 97 | குணித்தல் | மதித்தல், எண்ணுதல் |
| 98 | குனித்தல் | வளைதல் |
| 99 | குணிப்பு | அளவு, ஆராய்ச்சி |
| 100 | குனிப்பு | வளைப்பு, ஆடல் |
| 101 | கேணம் | செழிப்பு, மிகுதி |
| 102 | கேனம் | பைத்தியம், மனநலக் குறைவு |
| 103 | கேணி | கிணறு |
| 104 | கேனி | மனநலம் பாதிக்கப்பட்டவர் |
| 105 | கோண் | கோணல் |
| 106 | கோன் | அரசன் |
| 107 | சாணம் | சாணை பிடித்தல், மாட்டின் சாணி |
| 108 | சானம் | அம்மி, பெருங்காயம் |
| 109 | சுணை | கூர்மை, கரணை |
| 110 | சுனை | நீரூற்று |
| 111 | சுண்ணம் | கையால் இடிக்கும் வாசனைப் பொடி |
| 112 | சுன்னம் | சுண்ணாம்பு, சூழியம் |
| 113 | சேணம் | மெத்தை |
| 114 | சேனம் | பருந்து |
| 115 | சேணை | அறிவு |
| 116 | சேனை | படை, ஒருவகைக் கிழங்கு |
| 117 | சோணம் | பொன், சிவப்பு, தீ, சோணமலை |
| 118 | சோனம் | மேகம் |
| 119 | சோணை | ஒரு நதி, சேரன் மனைவி |
| 120 | சோனை | மழைச்சாரல், மேகம் |
| 121 | தண் | குளிர்ச்சி |
| 122 | தன் | தன்னுடைய |
| 123 | தணி | தணித்தல் |
| 124 | தனி | தனிமை |
| 125 | தாணி | தான்றிமரம், மூன்று சக்கர ஊர்தி |
| 126 | தானி | இருப்பிடம், பண்டசாலை |
| 127 | தாணு | சிவன், தூண், நிலைப்பேறு |
| 128 | தானு | காற்று |
| 129 | திணை | ஒழுக்கம், குலம் |
| 130 | தினை | ஒருவகைப் சிறுகூலப் பயிர் |
| 131 | திண்மை | உறுதி |
| 132 | தின்மை | தீமை |
| 133 | திண் | வலிமை |
| 134 | தின் | உண்பது |
| 135 | துணி | துணிதல், சவளி |
| 136 | துனி | அச்சம், ஊடல் நீட்டித்தல் |
| 137 | தெண் | தெளிவு |
| 138 | தென் | தெற்க திசை, அழகு |
| 139 | நண்பகல் | நடுப்பகல் |
| 140 | நன்பகல் | நல்லபகல் |
| 141 | நணி | அணி (அழகு) |
| 142 | நனி | மிகுதி |
| 143 | நாண் | வெட்கம், கயிறு |
| 144 | நான் | தன்மைப் பெயர் |
| 145 | நாணம் | வெட்கம் |
| 146 | நானம் | புனுகு, கவரிமான் |
| 147 | பணி | வேலை, கட்டளையிடு |
| 148 | பனி | துன்பம், குளிர், சொல், நோய் |
| 149 | பணை | முரசு, உயரம், பரந்த |
| 150 | பனை | ஒருவகை மரம் |
| 151 | பண் | இசை |
| 152 | பன் | அரிவாள், பல |
| 153 | பண்ணை | தோட்டம் |
| 154 | பன்னை | கீரைச்செடி |
| 155 | பண்ணுதல் | செய்தல் |
| 156 | பன்னுதல் | நெருங்குதல் |
| 157 | பண்ணி | செய்து |
| 158 | பன்னி | சீப்பு, பனிநீர், மனை, சணல்,பன்றி |
| 159 | பண்மை | தகுதி |
| 160 | பன்மை | பல |
| 161 | பணித்தல் | கட்டளையிடுதல் |
| 162 | பனித்தல் | துளித்தல், தூறல், விரிந்த |
| 163 | பட்டணம் | நகரம் |
| 164 | பட்டினம் | கடற்கரை நகர் |
| 165 | பாணம் | நீருணவு |
| 166 | பானம் | அம்பு |
| 167 | புணை | தெப்பம் |
| 168 | புனை | இட்டுக்கட்டுதல், கற்பனைப் புனைவு |
| 169 | புண் | காயம் |
| 170 | புன் | கீழான |
| 171 | பேணம் | பேணுதல் |
| 172 | பேனம் | நுரை |
| 173 | பேண் | போற்று, உபசரி |
| 174 | பேன் | ஓர் உயிரி |
| 175 | மணம் | வாசனை, திருமணம் |
| 176 | மனம் | உள்ளம், இந்துப்பு |
| 177 | மணை | மரப்பலகை, மணவறை |
| 178 | மனை | இடம், வீடு |
| 179 | மண் | தரை, மண்வகை |
| 180 | மன் | மன்னன், பெருமை |
| 181 | மண்ணை | இளமை, கொடி வகை |
| 182 | மன்னை | தொண்டை, கோபம் |
| 183 | மாணி | அழகு, பிரம்மசாரி |
| 184 | மானி | மானம் உடையவர், அளவிடும் கருவி |
| 185 | மாண் | மாட்சிமை |
| 186 | மான் | ஒரு விலங்கு |
| 187 | முணை | வெறுப்பு, மிகுதி |
| 188 | முனை | முன்பகுதி, துணிவு, முதன்மை |
| 189 | வணம் | ஓசை |
| 190 | வனம் | காடு, துளசி, கான் |
| 191 | வண்மை | வளப்பம், கொடை |
| 192 | வன்மை | உறுதி, வலிமை |
| 193 | வண்ணம் | நிறம், குணம், அழகு |
| 194 | வன்னம் | எழுத்து, நிறம் |
| 195 | வாணகம் | அக்கினி, பசுமடி |
| 196 | வானகம் | மேலுலகம் |
| 197 | வாணம் | அம்பு, தீ, மத்தாப்பு |
| 198 | வானம் | வான், மழை |
| 199 | வாணி | கலைமகள், திருமகள் |
| 200 | வானி | துகிற்கொடி |
| 201 | அலகு | பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை |
| 202 | அழகு | வடிவு |
| 203 | அளகு | சேவல், பெண்கூகை |
| 204 | அலகம் | திப்பிலி |
| 205 | அளகம் | வெள்ளெருக்கு, தண்ணீர் |
| 206 | அலகை | கற்றாழை, பேய் |
| 207 | அளகை | அளகாபுரி, பெண் |
| 208 | அலம் | கலப்பை |
| 209 | அளம் | உப்பு ஏரி |
| 210 | அலத்தல் | அலட்டல், அலைதல் |
| 211 | அளத்தல் | அளவிடுதல், மதித்தல் |
| 212 | அலவன் | ஆண்நண்டு |
| 213 | அளவன் | அளப்பவன், உப்பு எடுப்போன் |
| 214 | அழி | அழித்துவிடு |
| 215 | அலி | பேடி, காகம் |
| 216 | அளி | கருணை, கள், வண்டு, கொடு |
| 217 | அல்லல் | துன்பம் |
| 218 | அள்ளல் | அள்ளிக் கொள்ளுதல் |
| 219 | அழை | கூப்பிடுதல் |
| 220 | அலை | கடல், நீரலை, அலைதல் |
| 221 | அளை | தயிர், நண்டு, புற்று |
| 222 | அவல் | பள்ளம், உணவுப் பொருள் |
| 223 | அவள் | பெண் |
| 224 | அல் | இரவு |
| 225 | அள் | அள்ளி எடு, நெருக்கம் |
| 226 | உலவு | நடத்தல் |
| 227 | உளவு | ஒற்று, கமுக்கப் படை |
| 228 | உழவு | உழுதல் |
| 229 | உழி | இடம், பொழுது |
| 230 | உளி | தச்சுக் கருவிகளுள் ஒன்று |
| 231 | உலு | தானியப் பதர் |
| 232 | உழு | நிலத்தை உழுதல் |
| 233 | உளு | உளுத்துப் போதல் |
| 234 | உலை | உருக்கு உலை, நீருலை |
| 235 | உழை | பாடுபடு, பக்கம், கலைமான் |
| 236 | உளை | பிடரி மயிர், சேறு, தலை |
| 237 | உழுவை | புலி |
| 238 | உளுவை | மீன்வகை |
| 239 | எல் | கல், மாலை, சூரியன் |
| 240 | எள் | எண்ணெய் வித்து, எள்ளி நகையாடுதல் |
| 241 | எலு | கரடி |
| 242 | எழு | எழுந்திரு, தூண் |
| 243 | ஒலி | ஓசை, காற்று |
| 244 | ஒழி | அழி, தவிர், கொல், துற, ஒழித்தல் |
| 245 | ஒளி | வெளிச்சம், மறைத்து வைத்தல் |
| 246 | ஒல் | ஒலிக்குறிப்பு |
| 247 | ஒள் | அழகு, உண்மை, அறிவு, ஒளி |
| 248 | கலகம் | போர், அமளி, இரைச்சல் |
| 249 | கழகம் | சங்கம், கூட்டமைப்பு |
| 250 | கழங்கம் | கழங்கு, விளையாட்டுக் கருவி |
| 251 | களங்கம் | குற்றம், அழுக்கு |
| 252 | கலி | கலியுகம், பாட்டு வகை, சனி |
| 253 | கழி | கோல், மிகுதி, கடலின் கழிமுகம் |
| 254 | களி | மகிழ்வு, இன்பம், கொண்டாட்டம் |
| 255 | கலை | ஆண்மான், சந்திரன், கல்வி |
| 256 | கழை | மூங்கில், கரும்பு, கூத்து |
| 257 | களை | அழகு, பயிரின் இடை புள் |
| 258 | கல் | மலை, பாறை, சிறுகல் |
| 259 | கள் | உணவுப்பொருள், தேன், பனை தென்னை சாறு |
| 260 | கலம் | கப்பல், பாத்திரம் |
| 261 | களம் | இடம், போர்க்களம், இருள் |
| 262 | காலி | ஒன்றுமில்லாதது, வெற்றிடம் |
| 263 | காளி | துர்க்கை, மாயை |
| 264 | காழி | சீர்காழி |
| 265 | காலை | பொழுது, விடியற்பொழுது |
| 266 | காளை | காளைமாடு, இளைஞன் |
| 267 | காலம் | பொழுது, நேரம் |
| 268 | காளம் | எட்டிமரம், சூலம் |
| 269 | கிலி | அச்சம், பயம் |
| 270 | கிழி | கிழித்தல், பொன் முடிப்பு |
| 271 | கிளி | பறவை, வெட்டுக்கிளி |
| 272 | கிழவி | முதியவள், மூதாட்டி |
| 273 | கிளவி | சொல், மொழி |
| 274 | குலி | மனைவி |
| 275 | குழி | பள்ளம், பாத்தி, 12 *1 2 அடி பரப்புளவு |
| 276 | குளி | நீராடுதல் |
| 277 | குலம் | இனம், குடி |
| 278 | குளம் | நீர்நிலை, பெரியக் குட்டை |
| 279 | குலை | கொத்து, நிலை குலைதல் |
| 280 | குழை | குண்டலம், குழைந்துபோதல் |
| 281 | குலவி | மகிழ்ந்திருத்தல் |
| 282 | குழவி | குழந்தை, இளமை, அம்மிக்கல் |
| 283 | குளவி | ஒரு வண்டு, காட்டுமல்லி |
| 284 | குலிகம் | சிவப்பு, இலுப்பை |
| 285 | குளிகம் | மருந்து, மாத்திரை |
| 286 | குவலை | துளசி, கஞ்சா |
| 287 | குவளை | குவளை மலர், செம்பு |
| 288 | கூலம் | சிறு தானியம், கடைத்தெரு |
| 289 | கூளம் | குப்பை |
| 290 | கூலி | ஊதியம் |
| 291 | கொலு | அரசசபை, வீற்றிருத்தல் |
| 292 | கொழு | மழு, கலப்பையின் இரும்பு முனை, கொழுத்து இருத்தல் |
| 293 | கொளு | புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய் |
| 294 | கொலை | கொல்லுதல் |
| 295 | கொளை | கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம் |
| 296 | கொல்லாமை | கொலை செய்யாமை |
| 297 | கொள்ளாமை | ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை |
| 298 | கொல்லி | உயிர்க்கொல்லி, கொல்லி மலை |
| 299 | கொள்ளி | கொள்ளிக்கட்டை |
| 300 | கொல்லை | புழக்கடை, நிலம் |
| 301 | கொள்ளை | திருடுதல், மிகுதி |
| 302 | கோலம் | அழகு, கோலம் போடுதல் |
| 303 | கோளம் | உருண்டை, வட்டம் |
| 304 | கோலை | மிளகு |
| 305 | கோழை | வீரமற்றவன், கபம் |
| 306 | கோளை | குவளை, எலி |
| 307 | கோல் | மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு |
| 308 | கோள் | விண் கோள்கள் |
| 309 | கோலி | இலந்தை, விளையாடும் குண்டு |
| 310 | கோழி | உறையூர், விட்டில், பறவை |
| 311 | கோளி | பூவாது காய்க்கும் மரம், அத்தி, ஆலம் |
| 312 | சலம் | நீர், சிறுநீர், குளிர் |
| 313 | சளம் | பொய், துன்பம், வஞ்சனை |
| 314 | சாலை | பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம் |
| 315 | சாளை | கடல்மீன் |
| 316 | சாழை | குடிசை, குச்சு |
| 317 | சுழித்தல் | சுழலுதல், நீர்ச்சுழல் |
| 318 | சுளித்தல் | முறித்தல், சினத்தல் |
| 319 | சூலை | வயிற்று நோய், ஆங்கில மாதம் |
| 320 | சூளை | செங்கல், சுண்ணாம்பு சூளை |
| 321 | சூல் | கருத் தரித்தல் |
| 322 | சூழ் | சூழ்ந்துகொள், சுற்று |
| 323 | சூள் | சபதம் |
| 324 | சேல் | மீன் |
| 325 | சேள் | மேலிடம் |
| 326 | சோலி | இரவிக்கை, வேலை |
| 327 | சோழி | பலகரை |
| 328 | சோளி | கூடைவகை |
| 329 | தவளை | நீரிலும் நிலத்திலும் வாழும் ஓர் உயிரினம் |
| 330 | தவலை | ஒரு வகை பாத்திரம் |
| 331 | தலம் | இடம், ஊர் |
| 332 | தழம் | தைலம் |
| 333 | தளம் | மேடை, மாடி வீட்டின் கூரை |
| 334 | தழை | தழைத்தல், ஆட்டுக்கு கொடுக்கும் தாவர உணவு |
| 335 | தலை | மண்டை |
| 336 | தளை | விலங்கு |
| 337 | தாலம் | உலகம், தேன் |
| 338 | தாளம் | தாள இசைக்கருவி, இசைக்கட்டு |
| 339 | தாலி | மங்கலநாண் |
| 340 | தாழி | கடல், குடம், பெரியபாண்டம் |
| 341 | தாளி | தாளித்தல், பனைதால் |
| 342 | தாழ் | தாழ்தல், குனிதல், அடைக்கும் தாழ் |
| 343 | தாள் | முயற்சி, பாதம், ஆதி, படி, எழுதும் தாள் |
| 344 | துலக்கம் | ஒளி, தெளிவு |
| 345 | துளக்கம் | அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி |
| 346 | துலம் | கோரை, கனம் |
| 347 | துளம் | மாதுளை, மயிலிறகு |
| 348 | துலி | பெண் ஆமை |
| 349 | துழி | பள்ளம் |
| 350 | துளி | மழைத்துளி, திவலை, சிறிய அளவு |
| 351 | துலை | ஒப்பு, கனம் |
| 352 | துளை | ஓட்டை, வாயில் |
| 353 | தூலி | எழுதுகோல், எழுத்தாணி |
| 354 | தூளி | புழுதி, குதிரை, குழந்தைகளின் தூளி |
| 355 | தெழித்தல் | கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல் |
| 356 | தெளித்தல் | விதைத்தல், சபதம், கூறல், தூவுதல் |
| 357 | தெல் | அஞ்சுதல் |
| 358 | தெள் | தெளிவு |
| 359 | தோலன் | அற்பன் |
| 360 | தோழன் | நண்பன் |
| 361 | தோலி | பிசின், ஒருவகை மீன் |
| 362 | தோழி | பாங்கி, நண்பி |
| 363 | தோளி | அவுரிச்செடி, அரக்கு |
| 364 | தோல் | உடலின் மேல் தோல், வடிவு, தானியத்தின் மேல்பகுதி |
| 365 | தோள் | உடலின் தோள் பகுதி, வீரம் |
| 366 | நலன் | நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம் |
| 367 | நளன் | தமயந்தியின் கணவன், ஓர் அரசன் |
| 368 | நலி | உடல் நலிவுறுதல் |
| 369 | நளி | குளிர்ச்சி, பெருமை |
| 370 | நலிதல் | நலிந்துபோதல், தோற்றல் |
| 371 | நளிதல் | செறிதல், பரத்தல், ஒத்தல் |
| 372 | நல் | நல்ல |
| 373 | நள் | இரவு, நடு, நள்ளிரவு |
| 374 | நாலம் | பூவின் காம்பு |
| 375 | நாழம் | இழிவுரை, வசவு |
| 376 | நாளம் | பூந்தண்டு, உட்துளை, குருதி நாளம் |
| 377 | நாலி | முத்து, கந்தலாடை |
| 378 | நாழி | உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, நாழிகை |
| 379 | நாளி | கல், நாய் |
| 380 | நாலிகை | மூங்கில், அடுப்புச்சந்து |
| 381 | நாழிகை | வட்டம், நேர அளவு |
| 382 | நால் | நான்கு |
| 383 | நாழ் | குற்றம், செருக்கு |
| 384 | நாள் | காலம், 24 மணி நேர காலம் |
| 385 | நீலம் | ஒரு நிறம், கருங்குவளை, இருள் |
| 386 | நீளம் | நீண்ட, தாமதம், அளவை அலகு |
| 387 | நீல் | நீலம், காற்று |
| 388 | நீள் | நீளம், ஒளி |
| 389 | பலம் | கிழங்கு, வலிமை, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை |
| 390 | பழம் | கனி, முதுமை |
| 391 | பல்லி | சிற்றூர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு |
| 392 | பள்ளி | இசுலாமியர் வழிபடும் இடம், மருதநிலத்தூர், படுக்கை, கல்விக்கூடம் |
| 393 | பலி | பலியிடுதல், பலியுயிர் |
| 394 | பழி | குற்றம், அவதூறு |
| 395 | பால் | உணவு, பகுப்பு, இயல்பு, பாலினம் |
| 396 | பாழ் | வீண், வெறுமை |
| 397 | பீழை | துன்பம் |
| 398 | பீளை | கண் அழுக்கு |
| 399 | புலி | காட்டு விலங்கு, சோழ மன்னனின் இலச்சினை |
| 400 | புளி | புளியமரம், புளிப்புச் சுவை |
| 401 | புலை | புலால், ஊன், கீழ்மை |
| 402 | புழை | துளை, வாயில், நரகம் |
| 403 | புகல் | புகுதல், குடிபுகல் |
| 404 | புகழ் | பெருமை |
| 405 | புல் | அற்பம், கலவி, புல்பூண்டு |
| 406 | புள் | பறவை,புள்ளினம் |
| 407 | பூலம் | புற்கட்டு |
| 408 | பூளம் | பூவரசு |
| 409 | பூழை | துளை, கோபுரவாயில் |
| 410 | பூளை | பூளைச்செடி, இலவம் பஞ்சு |
| 411 | பாலி | தானியக் குவியல், தூற்றாத தானியம் |
| 412 | பாழி | கொடுத்தல், ஈதல் |
| 413 | பாளி | வரப்பு, எல்லை |
| 414 | பாலிவு | அழகு, நிறைவு, பொலிவு |
| 415 | பாழிவு | பொழிதல், மேன்மை |
| 416 | போலி | பொய், வஞ்சகம், ஒப்பு |
| 417 | போளி | இனிப்புப் பண்டம் |
| 418 | பொலிதல் | செழித்தல், மங்கலமாதல் |
| 419 | பொழிதல் | ஈதல், கொடுத்தல், சொரிதல், மழைபெய்தல், நிறைதல் |
| 420 | மலம் | அழுக்கு, பாவம், மனிதக்கழிவு |
| 421 | மழம் | இளமை, குழந்தை |
| 422 | மலை | பெருங் குன்று, பொருப்பு |
| 423 | மழை | மழைநீர், குளிர்ச்சி, மழை மேகம் |
| 424 | மலைத்தல் | வியத்தல், தடுமாறுதல் |
| 425 | மழைத்தல் | மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல் |
| 426 | மாலை | அந்திப்பொழுது, பூமாலை |
| 427 | மாழை | மயக்கம், இளமை, அழகு |
| 428 | மாளை | புளியம்பட்டை |
| 429 | மால் | திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, கருமை |
| 430 | மாள் | இறத்தல், சாதல் |
| 431 | முலை | பால் உறுப்பு |
| 432 | முழை | குகை |
| 433 | முளை | முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில் |
| 434 | முழி | விழி (விழித்தல்) |
| 435 | முளி | மரக்கணு, விரல்முளி, வாட்டம் |
| 436 | மூலி | மூலிகை, மரம், வேருள்ளது |
| 437 | மூழி | அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம் |
| 438 | மூலை | இரு கோடுகள் சந்திக்கும் இடம் |
| 439 | மூளை | தளையில் இருக்கும் உறுப்பு |
| 440 | மெல்ல | மென்று தின்பது, மெல்லுவது |
| 441 | மெள்ள | மெதுவாக |
| 442 | மாலி | மொளலி கிரீடம் |
| 443 | மாழி | மேழி, கலப்பை |
| 444 | மாளி | துணிமூட்டை |
| 445 | வலம் | சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி |
| 446 | வளம் | வளமை, அழகு, செழுமை |
| 447 | வலவன் | திருமால் |
| 448 | வளவன் | சோழன், வேளாளன் |
| 449 | வலன் | ஓர் அரசன், வெற்றி, வல்லவன் |
| 450 | வளன் | செழுமை, வளப்பன் |
| 451 | வழப்பம் | வழக்கம், இயல்பு |
| 452 | வளப்பம் | வளமை, செழிப்பு |
| 453 | வலி | நோய், வலிமை, துன்பம் |
| 454 | வழி | நெறி, பாதை, தடம் |
| 455 | வளி | காற்று |
| 456 | வலை | மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி, கொசுவலை |
| 457 | வழை | சுரபுன்னை, புதுமை, இளமை |
| 458 | வளை | கை வளையல், எலி வளை |
| 459 | வல் | வலிமை, விரைவு, திறமை |
| 460 | வள் | ஒலிக்குறிப்புச் சொல் |
| 461 | வல்லம் | வாழை, ஓர் ஊர் |
| 462 | வள்ளம் | மரக்கலம், படகு, அளவு, தொன்னை |
| 463 | வல்லி | பூமி, பெண், பிரிதல், படர் கொடி |
| 464 | வள்ளி | வள்ளியம்மை, நகை, சந்திரன் |
| 465 | வலு | வலிமை, பலம், பற்று |
| 466 | வழு | குற்றம், தவறு, பழிப்புரை, கேடு |
| 467 | வளு | இளமை, இளைய |
| 468 | வாலி | கிட்கிந்தை அரசன் (இராமாயணம்) |
| 469 | வாழி | வாழ்க (வாழ்த்துதல்) |
| 470 | வாளி | அன்பு, வட்ட வாள், வீரன், தண்ணீர் வாளி |
| 471 | வாலை | இளம்பெண், ஒரு சக்தி |
| 472 | வாழை | வாழைமரம் |
| 473 | வாளை | வாளை மீன் |
| 474 | வால் | விலங்குகளின் வால் |
| 475 | வாழ் | வாழ்வாயாக (வாழ்த்துதல்) |
| 476 | வாள் | போர்வாள், நீண்டகத்தி |
| 477 | விலா | விலா எலும்பு |
| 478 | விழா | திருவிழா, கொண்டாட்டம் |
| 479 | விளா | இளமை, வெண்மை, நிணம் |
| 480 | விழி | கண், கருவிழி |
| 481 | விளி | கூப்பிடு, அழை |
| 482 | விலை | மதிப்பு, விலைக்கு விற்றல் |
| 483 | விழை | விரும்பு, ஆசைப்படு |
| 484 | விளை | ஒரு மீன்வகை, விளைவித்தல் |
| 485 | விலக்கு | விலக்கி விடு, தவிர் |
| 486 | விளக்கு | விளக்கமாகச் சொல், எண்ணெய் விளக்கு |
| 487 | விலங்கு | பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம் |
| 488 | விளங்கு | திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை) |
| 489 | வெல்லம் | சக்கரைக்கட்டி, பனை வெல்லம் (கருப்பட்டி) |
| 490 | வெள்ளம் | மிதமிஞ்சிய நீர்பெருக்கு |
| 491 | வேலம் | வேலமரம், தோட்டம் |
| 492 | வேழம் | யானை, கரும்பு, மூங்கில் |
| 493 | வேல் | வேலாயுதம் |
| 494 | வேள் | வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை |
| 495 | வேலை | பணி, கடல் |
| 496 | வேளை | பொழுது, நேரம், ஒருவகைக் கீரை |
| 497 | அர | பாம்பு |
| 498 | அற | தெளிய, முற்றுமாக |
| 499 | அரவு | பாம்பு |
| 500 | அறவு | அறுதல், தொலைதல் |
| 501 | அரம் | ஒரு கருவி |
| 502 | அறம் | தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம் |
| 503 | அரி | திருமால், அரிசி, அழகு, அரிதல், சிவன், சிங்கம். |
| 504 | அறி | அறிந்து கொள்ளல். |
| 505 | அரிய | கிடைத்தற்கு அரிதான, சிறப்புடைய |
| 506 | அறிய | அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள |
| 507 | அரன் | சிவன் |
| 508 | அறன் | தர்மம், அறக்கடவுள், அறம் |
| 509 | அரிவை | பெண் ( 18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்) |
| 510 | அறிவை | அறிவாய் |
| 511 | அருகு | புல்வகை (அருகம்புல்), அண்மை |
| 512 | அறுகு | குறைதல், தேய்தல் |
| 513 | அக்கரை | அந்தக் கரை |
| 514 | அக்கறை | ஈடுபாடு |
| 515 | அரை | பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம் |
| 516 | அறை | வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை |
| 517 | அரைதல் | தேய்தல் |
| 518 | அறைதல் | அடித்தல், அழுத்திச் சொல்லுதல் |
| 519 | அப்புரம் | அந்தப் பக்கம் |
| 520 | அப்புறம் | பிறகு |
| 521 | அர்ப்பணம் | உரித்தாக்குதல் |
| 522 | அற்பணம் | காணிக்கை |
| 523 | அரு | உருவமற்றது, அருவம் |
| 524 | அறு | துண்டித்துவிடு, அறுத்துவிடு |
| 525 | அருமை | சிறப்பு, அன்பு, இன்மை, அரிய பொருள் |
| 526 | அறுமை | நிலையின்மை, ஆறு |
| 527 | ஆரு | குடம், நண்டு |
| 528 | ஆறு | ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை |
| 529 | ஆர | நிறைய, அனுபவிக்க |
| 530 | ஆற | சூடு ஆற (குறைய) |
| 531 | ஆரல் | ஒருவகை மீன் |
| 532 | ஆறல் | சூடு குறைதல் |
| 533 | இரத்தல் | யாசித்தல் |
| 534 | இறத்தல் | இறந்துபோதல், சாதல் |
| 535 | இரகு | சூரியன் |
| 536 | இறகு | பறவையின் சிறகு |
| 537 | இரக்கம் | கருணை, பரிவு |
| 538 | இறக்கம் | சரிவு, மரணம் |
| 539 | இரங்கு | கருணைகாட்டு |
| 540 | இறங்கு | கீழிறங்குதல் |
| 541 | இரவம் | இரவு |
| 542 | இறவம் | இறால் மீன் |
| 543 | இரவி | சூரியன், எருக்கு, மலை, வணிகம் |
| 544 | இறவி | இறத்தல் |
| 545 | இரவு | இரவு நேரம், இரத்தல், பிச்சை |
| 546 | இறவு | மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம் |
| 547 | இரை | இரைச்சல், ஒலி, உணவு |
| 548 | இறை | கடவுள், அணு, அரசன், தலைமை |
| 549 | இரு | இரண்டு, பெரிய, உட்கார், அமருதல் |
| 550 | இறு | ஒடி, கெடு, சொல்லு |
| 551 | இரும்பு | கடிவாளம், கிம்புரி, ஓர் உலோகம் |
| 552 | இறும்பு | வண்டு, சிறுமலை |
| 553 | இருப்பு | கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல் |
| 554 | இறுப்பு | வடிப்பு |
| 555 | இருத்தல் | அமர்ந்திருத்தல், காத்திருத்தல் |
| 556 | இறுத்தல் | வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல் |
| 557 | இருக்கு | மந்திரம், ரிக் மறை |
| 558 | இறுக்கு | அழுத்து, இறுக்கிக்கட்டு |
| 559 | இரைத்தல் | ஒலித்தல், மூச்சுவாங்குதல் |
| 560 | இறைத்தல் | சிதறுதல், மிகு செலவு |
| 561 | உரவு | அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம் |
| 562 | உறவு | நட்பு, சுற்றம், எறும்பு |
| 563 | உரவோர் | அறிஞர், முனிவர் |
| 564 | உறவோர் | சுற்றத்தார், அடைந்தோர் |
| 565 | உரி | தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி |
| 566 | உறி | உறிவெண்ணெய், தூக்கு |
| 567 | உரு | வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை |
| 568 | உறு | மிகுதி |
| 569 | உருக்குதல் | இளக்குதல், மெலியச் செய்தல் |
| 570 | உறுக்குதல் | சினத்தல், அதட்டுதல் |
| 571 | உரை | புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல் |
| 572 | உறை | இடம், பண்டம், பொருள், மருந்து, துளி, மழை, ஆடை, துன்பம், பை |
| 573 | உரைப்பு | தங்குதல், தோய்தல் |
| 574 | உறைப்பு | காரம், கொடுமை |
| 575 | உரையல் | சொல்லல் |
| 576 | உறையல் | மாறுபாடு, பிணக்கு |
| 577 | உரிய | உரிமையான |
| 578 | உறிய | உறிஞ்ச |
| 579 | ஊரல் | ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை |
| 580 | ஊறல் | தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு |
| 581 | ஊரு | அச்சம், தொடை |
| 582 | ஊறு | இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், துன்பம் |
| 583 | எரி | தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு |
| 584 | எறி | விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல் |
| 585 | ஏர | ஓர் உவமஉருபு |
| 586 | ஏற | மிகுதி, உயர (ஏறுதல்) |
| 587 | ஏரி | நீர்நிலை, குளம் |
| 588 | ஏறி | உயர்ந்த, மேலே ஏறி |
| 589 | ஒரு | ஒன்று, ஒப்பற்ற, ஆடு |
| 590 | ஒறு | தண்டி, அழி, இகழ் |
| 591 | ஒருத்தல் | ஆண் விலங்குகளின் பொதுப்பெயர் |
| 592 | ஒறுத்தல் | தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல் |
| 593 | ஒருவு | நீங்கு |
| 594 | ஒறுவு | வருத்தம், துன்பம் |
| 595 | கரடு | மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது |
| 596 | கறடு | தரமற்ற முத்து |
| 597 | கரம் | கிரணம், விடம், செயல், கை, கழுதை |
| 598 | கறம் | கொடுமை, வன்செய்கை |
| 599 | கரவு | பொய், வஞ்சனை, மறைவு |
| 600 | கறவு | கப்பம் |
| 601 | கரவை | கம்மாளர் கருவி |
| 602 | கறவை | பாற்பசு |
| 603 | கரி | அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை |
| 604 | கறி | இறைச்சி, மிளகு |
| 605 | கரத்தல் | மறைத்தல் |
| 606 | கறத்தல் | கவர்தல், பால் கறத்தல் |
| 607 | கருத்து | எண்ணம் |
| 608 | கறுத்து | கருநிறங்கொண்டு |
| 609 | கரு | சினை, பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு, அடிப்படை |
| 610 | கறு | சினம், பிடிவாதம், கோபம், அகங்காரம் |
| 611 | கருப்பு | பஞ்சம் |
| 612 | கறுப்பு | கருமைநிறம், பேய், கோபம், குற்றம், கறை |
| 613 | கரை | எல்லை, தடுப்பு, ஓரம் |
| 614 | கறை | அழுக்கு, குற்றம், குருதி |
| 615 | கரையான் | மீனவன் |
| 616 | கறையான் | செல் (ஓர் உயிரி) |
| 617 | கர்ப்பம் | கருவுறுதல், உள், சினை |
| 618 | கற்பம் | கஞ்சா, அற்பம், ஊழிக்காலம், தேவலோகம், திருநீறு, ஆயுள், மந்திரம் |
| 619 | கர்ப்பூரம் | சூடம், பொன், மருந்து, கூடம் |
| 620 | கற்பூரம் | பொன்னாங்கண்ணி |
| 621 | காரி | கரிக்குருவி. காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனிகிழமை |
| 622 | காறி | காறிஉமிழும் கழிவு |
| 623 | காரு | வண்ணான், தேவதச்சன் |
| 624 | காறு | காறுதல் (காறி உமிழ்), அளவு |
| 625 | காரை | ஒரு வகை செடி, ஒரு வகை மீன், சுதைக் கலவை |
| 626 | காறை | ஒரு கழுத்தணி |
| 627 | கீரி | ஓர் உயிரினம் |
| 628 | கீறி | பிளந்து, அரிந்து |
| 629 | குரங்கு | ஒரு விலங்கு |
| 630 | குறங்கு | தொடை, கொக்கி |
| 631 | குரவர் | கடவுள், குரு, பெரியோர், அரசர் |
| 632 | குறவர் | ஒரு ஜாதியினர் |
| 633 | குரவை | கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி |
| 634 | குறவை | ஒருவகை மீன் |
| 635 | குரத்தி | தலைவி, குருவின் மனைவி |
| 636 | குறத்தி | குறத்தி சாதிப் பெண் |
| 637 | குருகு | பறவை, குட்டி, கொக்கு, உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை |
| 638 | குறுகு | அண்மைப்படுத்து |
| 639 | குருகினம் | பறவை இனம் |
| 640 | குறுகினம் | நெருங்கினோம் |
| 641 | குரை | சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை |
| 642 | குறை | குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை |
| 643 | குரு | ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை |
| 644 | குறு | குறுகு |
| 645 | கூரல் | ஒரு மீன், பறவை இறகு |
| 646 | கூறல் | சொல்லுதல், விற்றல் |
| 647 | கூரை | சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில் |
| 648 | கூறை | புது ஆடை, சீலை |
| 649 | கூரிய | கூர்மையான |
| 650 | கூறிய | பேசிய |
| 651 | கூர | குளிர்ச்சி மிக |
| 652 | கூற | சொல்ல, வேண்டல் |
| 653 | கோரல் | கூறுதல் |
| 654 | கோறல் | கொல்லல் |
| 655 | கோரை | புல்வகை |
| 656 | கோறை | குவளை, பொந்து |
| 657 | கோரல் | சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம் |
| 658 | கோறல் | குளிர் காற்று, மழை |
| 659 | சிரை | சிரைத்தல், முடிநீக்கல் |
| 660 | சிறை | சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை |
| 661 | சீரிய | சினந்த, சிறந்த, சீராய் |
| 662 | சீறிய | சினந்த |
| 663 | சுரா | கள் |
| 664 | சுறா | சுறா மீன் |
| 665 | சூரல் | மூங்கில், பிரம்பு |
| 666 | சூறல் | தோண்டல் |
| 667 | சுருக்கு | வலை, சுருக்கம், கட்டு, பூமாலை, வகை, குறைவு |
| 668 | சுறுக்கு | விரைவு |
| 669 | செரு | போர், ஊடல் |
| 670 | செறு | வயல், பாத்தி, குளம் |
| 671 | செருநர் | பகைவர், படைவீரர் |
| 672 | செறுநர் | பகைவர் |
| 673 | சொரி | தினவு, அரிப்பு, பொழி |
| 674 | சொறி | சிரங்கு, சொறிதல் |
| 675 | தரித்தல் | அணிதல், பொறுத்தல், தங்கல், தாமதித்தல், தாங்குதல் |
| 676 | தறித்தல் | வெட்டுதல் |
| 677 | தரி | அணிதல், அணிந்துகொள் |
| 678 | தறி | தூண், ஆப்பு, நெசவு இயந்திரம், முளைக்கோல் |
| 679 | தருதல் | கொடுத்தல் |
| 680 | தறுதல் | இறுகக்கட்டுதல் |
| 681 | தாரு | மரம், தரு, தேவதாரு, பித்தளை |
| 682 | தாறு | குலை, அங்குசம், முள், இரும்பு, முள்கோல் |
| 683 | திரம் | மலை, உறுதி, நிலை, பூமி |
| 684 | திறம் | உறுதி, நரம்புள்ள வீணை, கூறுபாடு, சுற்றம், குலம், பக்கம், வல்லமை, மேன்மை |
| 685 | திரை | அலை, கடல், திரைச்சீலை |
| 686 | திறை | கப்பம் |
| 687 | துரவு | கிணறு |
| 688 | துறவு | துறத்தல், துறவறம் |
| 689 | துரை | பெரியோன், தலைவன் |
| 690 | துறை | நீர்த்துறை, வழி, இடம், நூல், கடற்கரை, பாவினம் |
| 691 | துரு | களிம்பு |
| 692 | துறு | கூட்டம், நெருக்கம் |
| 693 | தூரல் | தூருதல், வருத்தம் |
| 694 | தூறல் | மழைத்துளி, பழி சொல்லி தூற்றுதல் |
| 695 | தூரன் | குலத்தின் பெயர் |
| 696 | தூறன் | மூர்க்கன் |
| 697 | துரு | வீதி |
| 698 | துதறு | அழி |
| 699 | தேரார் | கல்லாதவர், கீழ்மக்கள், பகைவர் |
| 700 | தேறார் | அறிவிலார், பகைவர் |
| 701 | தேரி | மணல் திட்டை, மணல் குன்று |
| 702 | தேறி | தேர்ச்சி பெற்று, தெளிந்து |
| 703 | நரை | நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை |
| 704 | நறை | தேன், சாதிக்காய், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக்கொடி, குற்றம் |
| 705 | நாரி | பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன் |
| 706 | நாறி | கற்றாழை |
| 707 | நிருத்தம் | கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை |
| 708 | நிறுத்தம் | நிறுத்தும் இடம் |
| 709 | நிரை | பசு, ஒழுங்கு, வரிசை |
| 710 | நிறை | கற்பு, அளவு, அழிவின்மை, நீதி, வரையறை, திண்மை, நிரப்பு |
| 711 | நூரல் | அவிதல், பதங்கெடுதல் |
| 712 | நூறல் | அவித்தல் |
| 713 | நேரி | அமுக்கு, நசுக்கு, அழுத்து |
| 714 | நேறி | வழி, கோயில், கற்பு |
| 715 | பரட்டை | பரட்டைத்தலை |
| 716 | பறட்டை | செழிப்பற்றது |
| 717 | பரதி | கூத்தாடுபவன் |
| 718 | பறதி | அவசரம், பறத்தல் |
| 719 | பரத்தல் | அலமறுதல், மிகுதல் |
| 720 | பறத்தல் | பறந்துசெல்லல் |
| 721 | பரம்பு | வயலை சமப்படுத்தும் பலகை |
| 722 | பறம்பு | பாரியின் மலை |
| 723 | பரல் | விதை, பருக்கைக்கல் |
| 724 | பறல் | பறவை |
| 725 | பரவை | கடல், ஆடல், பரப்பு |
| 726 | பறவை | பறப்பவை, ஒரு நோய் |
| 727 | பரி | குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி |
| 728 | பறி | பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு, ஓலைப்பாய் |
| 729 | பரித்தல் | காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல், |
| 730 | பறித்தல் | பிடுங்குதல் |
| 731 | பரிவு | அன்பு, துன்பம், இரக்கம் |
| 732 | பறிவு | கழிவு, அதிர்தல் |
| 733 | பருகு | குடி, அருந்து |
| 734 | பறுகு | பறட்டை, அன்பு, பக்குவம் |
| 735 | பரை | சிவசக்தி |
| 736 | பறை | இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல் |
| 737 | பாரை | கடப்பாரை |
| 738 | பாறை | கற்பாறை |
| 739 | பிரை | உறைமோர், பயன் |
| 740 | பிறை | பிறைச்சந்திரன் |
| 741 | பீரு | புருவம், அச்சமுள்ளோன் |
| 742 | பீறு | கிழிவு |
| 743 | புரம் | மாடம், கோயில், ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம் |
| 744 | புறம் | இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி, பின்புறம், முதுகு |
| 745 | புரவு | கொடை, நிலம், செழுமை, காத்தல், அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம் |
| 746 | புறவு | காடு, புறா |
| 747 | பெருக்கல் | நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல், மிகுவித்தல் |
| 748 | பெறுக்கல் | அரிசி, மிகுத்தல் |
| 749 | பொரி | நெற்பொரி, பொரிதல் |
| 750 | பொறி | தீப்பொறி, அறிவு, எழுந்து, வரிவண்டு |
| 751 | பொரித்தல் | வறுத்தல், குஞ்சு பொரித்தல் |
| 752 | பொறித்தல் | எழுதுதல், தீட்டுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல் |
| 753 | பொருப்பு | மலை, பக்கமலை |
| 754 | பொறுப்பு | பாரம், பொறுமை |
| 755 | பொரு | போர் |
| 756 | பொறு | பொறுத்திரு |
| 757 | மரத்தல் | விறைத்தல் |
| 758 | மறத்தல் | மறதி, நினைவின்மை |
| 759 | மரம் | தாவர வகை, மூலிகை, மரக்கலம், பறைவகை |
| 760 | மறம் | வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம் |
| 761 | மரி | விலங்குகளின் குட்டி |
| 762 | மறி | தடை செய் |
| 763 | மரித்தல் | இறத்தல், சாதல் |
| 764 | மறித்தல் | தடுத்தல், திரும்புதல், அழித்தல். |
| 765 | மரை | மான் |
| 766 | மறை | வேதம் |
| 767 | மரு | மலை, பாலைநிலம், மணவிருந்து, நீரில்லா இடம், மருக்கொழுந்து |
| 768 | மறு | குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம் |
| 769 | மருப்பு | கொம்பு, யானைத் தந்தம், யாழ்த்தண்டு |
| 770 | மறுப்பு | எதிர்ப்பு |
| 771 | மருகு | வாசனை தாவரம் |
| 772 | மறுகு | சிறியதெரு |
| 773 | மாரன் | மன்மதன், காமன் |
| 774 | மாறன் | பாண்டியன், சடகோபாழ்வார் |
| 775 | முரி | பாலைநிலம், நொய், சிதைவு |
| 776 | முறி | ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு |
| 777 | முருக்குதல் | அழித்தல், உருக்குதல் |
| 778 | முறுக்குதல் | சுழற்றுதல், திரித்தல் |
| 779 | வரம் | இறைவன் கொடுப்பது, வேண்டும் பொருள், தெய்வ ஈகை, மேன்மை, விருப்பம் |
| 780 | வறம் | வற்றுதல், வறட்சி, பஞ்சம், நீரின்மை, வறுமை, வெம்மை |
| 781 | வரவு | வருமானம், வழி |
| 782 | வறவு | கஞ்சி |
| 783 | வரப்பு | எல்லை, வரம்பு |
| 784 | வறப்பு | வறட்சி, வறுமை, வற்றுதல் |
| 785 | விரகு | விவேகம், உபாயம், உற்சாகம், புத்தி, கபடம் |
| 786 | விறகு | எரிகட்டை |
| 787 | விரலி | மஞ்சள் |
| 788 | விறலி | மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடும் பெண், பருவப்பெண் |
| 789 | விரல் | கை விரல் |
| 790 | விறல் | பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி. |
| 791 | விராய் | விறகு |
| 792 | விறாய் | செருக்கு, இறுமாப்பு |
| 793 | வெரு | அச்சம் |
| 794 | வெறு | வெறுத்துவிடு |
| 795 | வெரல் | மூங்கில் |
| 796 | வெறல் | வெல்லுதல், வெற்றி கொள்ளல் |
| 797 | விரை | விரைந்துசெல் |
| 798 | விறை | மரத்துப்போதல், விறைத்துப்போதல் |