Thursday, 26 February 2026

Contact Info

  • ADDRESS: Street, City, Country

  • PHONE: +(123) 456 789

  • E-MAIL: your-email@mail.com

  • Home  
  • மறைமலையடிகள் புகழ்வணக்கப்பா!
- Blogs

மறைமலையடிகள் புகழ்வணக்கப்பா!

தனித்தமிழின் பெருநெருப்பு ஆறு – நம் மறைமலையாம் அடிகள்பெயர் கூறு – உன் மனத்தினையே இரும்பாக்கி ஏறு – தமிழ் மீட்சிக்கே புலியாக மாறு ! குணக்குன்றாய் மறைமலையே நின்றார் – தமிழ் தனித்தியங்கும் சிறப்பினையே கண்டார் ! – பலர் மணிப்பவழ நடையென்றே சொல்லி – எழுதினார் சமற்கிருதம் கலந்தன்றே அள்ளி ! வேதாசலம் என்றபெயர் மாற்றி – நல்ல மறைமலையாம் எனும் பெயரைச் சூட்டி – கருத்து மோதலிலே வென்றிட்டார் தேற்றி – தனித் […]

தனித்தமிழின் பெருநெருப்பு
ஆறு – நம்
மறைமலையாம் அடிகள்பெயர்
கூறு – உன்
மனத்தினையே இரும்பாக்கி
ஏறு – தமிழ்
மீட்சிக்கே புலியாக
மாறு !

குணக்குன்றாய் மறைமலையே
நின்றார் – தமிழ்
தனித்தியங்கும் சிறப்பினையே
கண்டார் ! – பலர்
மணிப்பவழ நடையென்றே
சொல்லி – எழுதினார்
சமற்கிருதம் கலந்தன்றே
அள்ளி !

வேதாசலம் என்றபெயர்
மாற்றி – நல்ல
மறைமலையாம் எனும் பெயரைச்
சூட்டி – கருத்து
மோதலிலே வென்றிட்டார்
தேற்றி – தனித்
தமிழுக்கே நற்செயலை
ஆற்றி !

பிறமொழியின் கலப்பென்றால்
தீது – என்ற
அவர்மகள்; நீ லாம்பிகைபுகழ்
ஓது – வெல்லும்
அறத்தமிழர் போற்றவே; அப்
போது – நல்ல
அகரமுதலி தந்தார் குறை
யாது !

 

பெற்றமொழியைப் பேசாதான்
மண்டு – உலகப்
பெருந்தமிழும் சிவனியமும்
பண்டு – எனக்
கற்றவரும் மற்றவரும்
கண்டு – உள்ளம்
களித்திடவே செய்தார் இறைத்
தொண்டு !

இந்திப்போர்ப் படையின்தலை
ஆனார் – தன்
குடும்பத்துடன் சிறையினுக்கே
போனார் – தூய
செந்தமிழின் சொற்பொழிவுத்
தேனார் – நம்
தமிழ்மீட்சிப் பாசறைவடி
வானார் !

வீட்டையே தனித்தமிழாய்
ஆக்கி – தமிழ்
விளைந்திடவே பலரையுமே
ஊக்கி – தமிழ்
நாட்டையே மொழியுணர்வில்
தேக்கி – வைத்தார்
அடிதொழுது எழுவோம்வா
நோக்கி !

தனித்தமிழும் இனநலமும்
காக்க – நாம்
தமிழ்ர்படை எழும்தீமை
போக்க – உலகப்
பரப்பெங்கும் புலிக்கொடியே
பூக்க – அடிகள்
பாதையிலே வா தமிழைக்
காக்க !

– தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

About Us

Lorem ipsum dol consectetur adipiscing neque any adipiscing the ni consectetur the a any adipiscing.

Email Us: infouemail@gmail.com

Contact: +5-784-8894-678

Thamizhmeetchi  @2024. All Rights Reserved.